Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

"குடியிருப்பாளர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதற்கே முன்னுரிமை"

புக்கிட் பாத்தோக் குடியிருப்பாளர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதற்கே முன்னுரிமையளிக்கப்போவதாக மக்கள் செயல் கட்சி வேட்பாளர் திரு. முரளி பிள்ளை தெரிவித்துள்ளார்.

வாசிப்புநேரம் -
"குடியிருப்பாளர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதற்கே முன்னுரிமை"

மக்கள் செயல் கட்சி வேட்பாளர் திரு. முரளி பிள்ளை (படம்: Linette Lim)

புக்கிட் பாத்தோக் குடியிருப்பாளர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதற்கே முன்னுரிமையளிக்கப்போவதாக மக்கள் செயல் கட்சி வேட்பாளர் திரு. முரளி பிள்ளை தெரிவித்துள்ளார்.

இன்று காலை மேற்கொண்ட தொகுதி உலாவுக்குப் பிறகு அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

ஓய்வுக்காலச் சவால்கள், மூத்தோர் பராமரிப்பு ஆகியவற்றைச் சமாளிக்கத் திட்டங்கள் வகுத்துள்ளதாக திரு. முரளி கூறியுள்ளார். 

அர்ப்பணிப்பு மிக்க தொண்டூழியர்கள் மூலம் திட்டங்களை நிறைவேற்றவிருப்பதாகத் தெரிவித்துள்ளார். 

வார இறுதியில் வாக்களிப்பு.

முழு வீச்சில் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார் திரு. முரளி. 

பல்வேறு இடங்களில் குடியிருப்பாளர்களைச் சந்தித்து ஆதரவு திரட்டினார். 

தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள திட்டங்கள் பற்றித் திரு. முரளி விளக்கினார். 

குடியிருப்பாளர்களின் தேவைகளை நிறைவேற்ற மூத்தோர் பராமரிப்பு நிலையம் கட்டப்படும். அது அனைவரும் எளிதில் வந்து செல்லும் இடத்தில் அமையும் என்றார் அவர். 

புக்கிட் பாத்தோக் குடியிருப்பாளர்களில் ஒன்பதில் ஒருவர் 65 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடையவர்கள். 

இன்னும் ஐந்தாண்டுகளில் அத்தகையோரின் எண்ணிக்கை அதிகரிக்கலாம். 

மூத்தோர் பராமரிப்பு நிலையம் இங்குள்ளோரின் சில பிரச்சினைகளைத் தீர்க்க உதவுமென நம்புவதாகச் சொன்னார் திரு. முரளி. 

மூத்தோருக்கான அவசரகாலப் பொத்தான் முறை குறித்தும் அவர் பேசினார். 

தேவையுடையோர் பொத்தானைக் கழுத்தில் அணிந்துகொள்ளலாம். 

உதவி தேவைப்படும்போது அண்டை வீட்டார், உறவினர்கள், சமூகத் தலைவர்கள் ஆகியோரை அதன் மூலம் அழைக்கலாம். 

புக்கிட் பாத்தோக்கில் நிலவும் கம்பத்து உணர்வைப் பயன்படுத்திக்கொள்ள அது மேலும் கைகொடுக்கும் என்றார் திரு. முரளி.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்