Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

"வேலை சந்தைப் பற்றி தவறாகப் புரிந்துகொள்ளவில்லை"

புக்கிட் பாத்தோக் இடைத்தேர்தலுக்கான சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் டாக்டர் சீ சூன் ஜுவான், வேலைச் சந்தை பற்றித் தாம் தவறாகப் புரிந்துகொண்டதாக மனிதவள அமைச்சு கூறியிருப்பதை நிராகரித்துள்ளார்.

வாசிப்புநேரம் -

புக்கிட் பாத்தோக் இடைத்தேர்தலுக்கான சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் டாக்டர் சீ சூன் ஜுவான், வேலைச் சந்தை பற்றித் தாம் தவறாகப் புரிந்துகொண்டதாக மனிதவள அமைச்சு கூறியிருப்பதை நிராகரித்துள்ளார்.

வேலைகள் தொடர்பான புள்ளிவிவரங்களைத் தவறாகப் புரிந்துகொண்டு வேலைச்சந்தை பற்றி சிங்கப்பூர்களிடையே பீதியூட்டும் வகையில் டாக்டர் சீ கருத்துகளை வெளியிட்டதாக அமைச்சு கூறியிருந்தது. 

இன்று நடைபெற்ற தமது கட்சியின் இறுதிப் பிரசாரக் கூட்டத்தில் அவர் அதனை மறுத்துப் பேசினார். 

சிங்கப்பூரர்களுக்காக கடந்தாண்டு உருவாக்கப்பட்ட புதிய வேலைகளின் எண்ணிக்கை 100 எனத் தாம் சொன்னது தவறென்று மனிதவள அமைச்சு கூறியுள்ளதாக டாக்டர் சீ தெரிவித்தார்.

சரியான எண்ணிக்கை 700 என்று அமைச்சு சொன்னதாக அவர் குறிப்பிட்டார். 

ஆனால் உருவாக்கப்பட்ட புதிய வேலைகளின் எண்ணிக்கை 100 என மனிதவள அமைச்சர் திரு லிம் சுவீ சே தெரிவித்திருந்ததாக டாக்டர் சீ சுட்டினார்.

தற்போது 700 என அவர்கள் மாற்றிச் சொல்வதாகவும் அதனால் தம் மீது குறைகூறுவது முறையல்ல என்றும் அவர் வலியுறுத்தினார். 

2014ஆம் ஆண்டில் சிங்கப்பூரர்களுக்காக உருவாக்கப்பட்ட புதிய வேலைகளின் எண்ணிக்கை 96,000 ஆக  இருந்தது. 

கடந்தாண்டில் 700 புதிய வேலைகள் மட்டுமே உருவாக்கப்பட்டிருந்தால், முந்திய ஆண்டைக் காட்டிலும் அது 99 விழுக்காடு குறைவு என்பதை டாக்டர் சீ சுட்டினார்.

அத்தகைய முக்கியத் தகவல் பற்றி மக்களுக்கு உண்மையான விவரங்களை மனிதவள அமைச்சு வழங்குவது மிகவும் அவசியம் என அவர் வலியுறுத்தினார்.

இடைத்தேர்தலில் தாம் வெற்றி பெற்றால், புக்கிட் பாத்தோக் தொகுதிவாசிகளுக்காக அரசாங்கம் முனவைத்துள்ள பயனுள்ள திட்டங்களை தமது கட்சி செயல்படுத்தும் என டாக்டர் சீ உறுதியளித்தார்.

அதே வேளையில், பொருத்தமற்ற கொள்கைகளைப் பற்றி வாதிடவும் தயங்கப்போவதில்லை என்றார் அவர்.

தற்போதைய பிரசார அனுபவம் தமக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்துள்ளதாக டாக்டர் சீ சொன்னார்.

ஆளுங்கட்சி தனது குணநலன்களைச் சிதைக்கும் விதமான கருத்துகளை வெளியிட்டதாக அவர் மீண்டும் குறைகூறினார்.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்