Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

கடைசி நாள் பிரசாரக் கூட்டங்கள்

சிங்கப்பூர் மக்கள் கட்சி, தேசிய ஒருமைப்பாட்டுக் கட்சி ஆகியவை தங்களின் கடைசி நாள் பிரசாரக் கூட்டங்களை இப்போது நடத்துகின்றன. சிங்கப்பூருக்கான தங்களின் கண்ணோட்டத்தைக் கட்சி வேட்பாளர்கள் ஒவ்வொருவராக முன்வைத்து வருகின்றனர். 

வாசிப்புநேரம் -

சிங்கப்பூர்: சிங்கப்பூர் மக்கள் கட்சி, தேசிய ஒருமைப்பாட்டுக் கட்சி ஆகியவை தங்களின் கடைசி நாள் பிரசாரக் கூட்டங்களை இப்போது நடத்துகின்றன. சிங்கப்பூருக்கான தங்களின் கண்ணோட்டத்தைக் கட்சி வேட்பாளர்கள் ஒவ்வொருவராக முன்வைத்து வருகின்றனர். 

சிங்கப்பூர் மக்கள் கட்சியின் கடைசி நாள் பிரசாரத்தைத் தொடங்கி வைத்தார் ஹோங் கா நார்த் தனித்தொகுதியில் போட்டியிடும் திரு. ரவி ஃபிலமோன். உணர்ச்சிபூர்வமாக உரையாற்றிய திரு. ரவி, மின்சாரம், வீடமைப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்களைப் பற்றி பேசினார்.

பிஷான் தோ பாயோ குழுத்தொகுதியில் வாழும் மக்கள், கூடுதல் குழந்தைப் பராமரிப்பு நிலையங்களையும் மூத்த குடிமக்களுக்கான வசதிகளையும் எதிர்பார்ப்பதாகத் தம்மிடம் பேசிய வாக்காளர் ஒருவர் கூறியது பற்றி அவர் குறிப்பிட்டார். ஆனால் அவர்களுக்குக் கிடைப்பதோ, வீட்டுக் கீழ்த்தளங்களில், வசிப்போர்க் குழுக்களுக்கான நிலையங்கள் என்றார். மக்கள் கேட்பதைக் கொடுக்காமல், ஆட்சியில் இருப்பவர்கள், அவர்கள் நினைப்பதை மட்டுமே கொடுப்பதாகத் திரு ரவி சொன்னார்.

தேசிய ஒருமைப்பாட்டுக் கட்சியும் தெம்பனீஸ் குழுத்தொகுதிக்கான அதன் இறுதிப் பிரசாரக் கூட்டத்தை இப்போது, நீ சூன் உயர்நிலைப் பள்ளித் திடலில் நடத்துகிறது. 

சிங்கப்பூர் கடந்து வந்துள்ள பாதை, அது தற்போது சென்று கொண்டிருக்கும் திசை ஆகியவற்றை வாக்காளர்கள் மனத்தில் கொள்ளவேண்டும் என்று கூறினர் தேசிய ஒருமைப்பாட்டுக் கட்சி வேட்பாளர்கள்.

தொடர்ந்து இரவு 10 மணிவரை நடைபெறும் கடைசி நாள் பிரசாரக் கூட்டங்களைப் பற்றி இரவு பதினொன்றரை மணிக்கு ஒளிபரப்பாகும் சிறப்புத் தேர்தல் தொகுப்பில் பார்க்கலாம்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்