Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

வாக்களிப்பு தினம்

சிங்கப்பூரில் இன்று பொதுத் தேர்தலுக்கான வாக்களிப்பு தினம். 2.46 மில்லியன் வாக்காளர்கள், வாக்களிக்கத் தகுதிபெற்றுள்ளனர். 

வாசிப்புநேரம் -

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் இன்று பொதுத் தேர்தலுக்கான வாக்களிப்பு தினம். 2.46 மில்லியன் வாக்காளர்கள், வாக்களிக்கத் தகுதிபெற்றுள்ளனர்.

16 குழுத்தொகுதிகள், 13 தனித்தொகுதிகள் என 29 தொகுதிகளில், மொத்தம் 89 இடங்களுக்கான நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தேர்தெடுக்க, தேர்தல் நடைபெறுகிறது.

இன்று காலை 8 மணியில் இருந்து, இரவு 8 மணி வரை, 12 மணிநேரத்துக்கு வாக்களிப்பு நிலையங்கள் திறந்திருக்கும்.

சிங்கப்பூர் முழுவதும், 830-க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகள் இயங்குகின்றன.

தஞ்சோங் பகார் குழுத்தொகுதியில், 27 ஆண்டுகளுக்குப் பிறகு, முதல் முறையாகப் போட்டி நிலவுகிறது.

அங்கு மக்கள் செயல் கட்சி வேட்பாளர்கள் திரு சான் சுன் சிங், குமாரி இந்திராணி ராஜா, டாக்டர் சியா ஷி லு, திரு மெல்வின் யோங், திருவாட்டி ஜோன் பெரெய்ரா ஆகியோர் கொண்ட குழு , "சிங்கப்பூரர்களுக்கு முன்னுரிமைக் கட்சியை" எதிர்த்து போட்டியிருக்கிறது.

அந்தக் கட்சியில், திருவாளர்கள் டான் ஜீ சே, அங் யோங் குவான், சிராக் தேசாய், மெல்வின் சியூ, ஃபாமி ரயிஸ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

ராடின் மாஸ், மெக்பர்சன், புக்கிட் பாத்தோ தனித்தொகுதிகளில், மும்முனைப் போட்டி நிலவுகிறது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்