வெற்றி விழா
தஞ்சோங் பகார் குழுத்தொகுதியில் வெற்றிப் பெற்ற திரு சான் சுன் சிங்கும் அவரது அணியினரும் இன்று தொகுதி உலா மேற்கொண்டனர். பெக் கியொ சந்தையிலும் தேங்லின் ஹால்ட் சந்தையிலும் அவர்கள் வட்டார வாசிகளைச் சந்தித்து அவர்களின் ஆதரவிற்கு நன்றி தெரிவித்தனர்.
மதியம் 4.20 மணி: பிரதமர் லீ சியென் லூங்கும் அங் மோ கியோ குழுத் தொகுதிக்கான அவரது ம.செ.க அணியினரும் ஹோகாங் Springல் தங்களுக்கு ஆதரவு அளித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கின்றனர்.
மதியம் 2 மணி: பாட்டாளிக் கட்சியின் சென் ஷொவ் மவ்வும் ஹோங்காங் அவன்யூ 2க்கு சென்றனர்.
மதியம் 1:25 மணி: ஹோகாங்கில் நன்றி கூறும் ஊர்வலத்திற்கு தயாராகும் பாட்டாளிக் கட்சி உறுப்பினர்கள்.
காலை 11:45: துணைப் பிரதமர் திரு தர்மன் சண்முகரத்தினத்தை லயன் டான்ஸ் குழுவினர் வரவேற்றனர். ஜூரோங்கில் வெற்றிப் பெற்ற திரு தர்மனின் ம.செ.க அணி, ஆக அதிகமான வாக்கு பங்கை எடுத்தது. சிங்கப்பூரர்களுக்கு முன்னுரிமைக் கட்சிக்கு எதிராக அது 79.3 விழுக்காட்டை பெற்றது.
காலை 10:30: பொதுத் தேர்தலின் முடிவுகளைத் தொடர்ந்து அமெரிக்க தூதர் Kirk Wagar, பிரதமர் திரு லீ சியென் லூங்கிற்கு வாழ்த்துகளைத் தெரிவித்திருக்கிறார். மக்கள் ஒன்றிணைந்து சுதந்திர, நேர்மையான தேர்தலுக்கான கடப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளனர் என்றும் திரு. Wagar தெரிவித்துள்ளார். அமெரிக்கா தொடர்ந்து சிங்கப்பூருடன் நெருக்கமான ஈடுபாட்டுடன் பணியாற்ற விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
காலை 10:20: மார்சிலிங் - இயூ டீ குழுத்தொகுதிக்கான ம.செ.க அணியினரின் நன்றி கூறும் ஊர்வலத்தில் கலாச்சார, சமூக, இளையர் துறை அமைச்சர் திரு லாரன்ஸ் வோங். சுவா சூ காங் வாசிகளுக்கு வணக்கம் தெரிவிக்கிறார்.
காலை 9:30: தஞ்சோங் பகார் குழுத்தொகுதியில் வெற்றிப் பெற்ற திரு சான் சுன் சிங்கும் அவரது அணியினரும் இன்று தொகுதி உலா மேற்கொண்டனர். பெக் கியொ சந்தையிலும் தேங்லின் ஹால்ட் சந்தையிலும் அவர்கள் வட்டார வாசிகளைச் சந்தித்து அவர்களின் ஆதரவிற்கு நன்றி தெரிவித்தனர்.
(படம்: திரு சான் சுன் சிங்கின் Facebook பக்கம்)