Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

ஃபெங்ஷானில் வென்ற புதுமுகம்

புதிதாக அமைக்கப்பட்ட ஃபெங்ஷான் தனித்தொகுதியில் போட்டியிட்ட மக்கள் செயல் கட்சியின் வேட்பாளரும், பாட்டாளிக் கட்சி வேட்பாளரும் அரசியலுக்குப் புதியவர்கள். 

வாசிப்புநேரம் -
ஃபெங்ஷானில் வென்ற புதுமுகம்

ஃபெங்ஷான் தனித்தொகுதியில் வெற்றி பெற்ற செரில் சான்

சிங்கப்பூர்: புதிதாக அமைக்கப்பட்ட ஃபெங்ஷான் தனித்தொகுதியில் போட்டியிட்ட மக்கள் செயல் கட்சியின் வேட்பாளரும், பாட்டாளிக் கட்சி வேட்பாளரும் அரசியலுக்குப் புதியவர்கள். அந்தத் தொகுதியில் போட்டி நெருக்கமாக இருக்கும் எனக் கருத்தப்பட்டது.

மக்கள் செயல் கட்சியின் செரில் சான் 57 விழுக்காட்டு வாக்குகள் பெற்று வெற்றி கண்டார். பாட்டாளிக் கட்சியின் டென்னிஸ் டான், 42.49 விழுக்காட்டு வாக்குகளைப் பெற்றார்.

1988-ம் ஆண்டு குழுத்தொகுதிகள் அறிமுகப்படுத்தப்பட்டன. அதில் இருந்து, மக்கள் செயல்கட்சி வசமுள்ள தனித்தொகுதியில் புதியவர் ஒருவர் அறிமுகப்படுத்தப்பட்டது இதுவே முதல் முறை.

எரிவாயு, பொறியியல் பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் மூத்த நிர்வாகியாகப் பணிபுரியும் செரில் சான், அந்தத் தொகுதிக்குப் புதியவர் அல்லர். அவர் ஃபெங்ஷான் தொகுதியில் குடியிருப்பவர். அவர் கடந்த பத்தாண்டாய் அங்கு தொண்டூழியம் செய்து வந்துள்ளார். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்