Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

"முடிவுகளை மிகுந்த பணிவுடன் ஏற்றுக்கொள்கிறேன்"

தேர்தல் முடிவுகள் குறித்து, பிரதமர் திரு லீ சியென் லூங் மகிழ்ச்சி தெரிவித்திருக்கிறார். இன்று அதிகாலை நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அவர் அதனைத் தெரிவித்தார். 

வாசிப்புநேரம் -
"முடிவுகளை மிகுந்த பணிவுடன் ஏற்றுக்கொள்கிறேன்"

செய்தியாளர் கூட்டத்தில் பிரதமர் திரு லீ சியென் லூங்

சிங்கப்பூர்: தேர்தல் முடிவுகள் குறித்து, பிரதமர் திரு லீ சியென் லூங் மகிழ்ச்சி தெரிவித்திருக்கிறார். இன்று அதிகாலை நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அவர் அதனைத் தெரிவித்தார். 

முடிவுகளை மிகுந்த பணிவுடன் ஏற்றுக்கொள்வதாகத் திரு. லீ குறிப்பிட்டார். தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குப் பொறுப்பு அதிகரித்துள்ளது என்றும் மேலும் கூடுதலாக உழைக்க வேண்டிய கடமை அவர்களுக்கு உள்ளது என்றும் திரு. லீ கூறினார்.

அனைத்துத் தரப்பினரும் வாக்களித்திருப்பது குறித்து அவர் மனநிறைவு தெரிவித்தார். குறிப்பாக இளையர்கள், நிலைமையைப் புரிந்துகொண்டு வாக்களித்துள்ளனர். ஆளுங்கட்சியின் செயல்பாட்டை அவர்கள் ஆதரிப்பதையே அது காட்டுவதாகச் சொன்னார் பிரதமர் லீ. இளையர்கள், வருங்காலத்தில் பொறுப்பை ஏற்றுக்கொண்டு நாட்டை முன்னெடுத்துச் செல்லவேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

தங்களுக்கு வாக்காளிக்காதவர்கள் உட்பட அனைத்து சிங்கப்பூரர்களுடன் சேர்ந்து பணியாற்றப்போவதாகத் திரு. லீ தெரிவித்தார்.

ஒன்றுபட்டிருந்தால்தான் முன்னேற முடியும் என்பதையும் வளப்பத்தோடு வாழமுடியும் என்பதையும் மக்கள் புரிந்துகொண்டிருப்பதையே இந்தத் தேர்தல் காட்டுகிறது. சிங்கப்பூருக்குச் சேவையாற்ற, ஆகச் சிறந்த குழுவை அமைக்க வேண்டியது முக்கியம் என்றும் பிரதமர் லீ குறிப்பிட்டார். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்