Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

12 தனித் தொகுதிகளில் வென்ற ம.செ.க

சிங்கப்பூரிலுள்ள தனித் தொகுதிகள் 13.  அவற்றில் 12ல் ஆளும் மக்கள் செயல் கட்சி வென்றுள்ளது. 

வாசிப்புநேரம் -

சிங்கப்பூரிலுள்ள தனித் தொகுதிகள் 13. 

அவற்றில் 12ல் ஆளும் மக்கள் செயல் கட்சி வென்றுள்ளது. 

பொங்கோல் ஈஸ்ட் தனித்தொகுதியில் கிடைத்த வெற்றி முக்கியமானது.

2013 இடைத் தேர்தலில் மக்கள் செயல் கட்சியிடமிருந்து எதிர்த்தரப்புப் பாட்டாளிக் கட்சி அந்தத் தொகுதியைக் கைப்பற்றியது. 

இப்போது பொங்கோல் ஈஸ்ட் மீண்டும் ஆளும் கட்சியின் வசமாகியிருக்கிறது.

இரண்டாம் முறையாகத் தனித்தொகுதியில் களம் இறங்கினார் மக்கள் செயல் கட்சியின் திரு. சார்ல்ஸ் சோங். 

கடுமையான போட்டிக்குப் பிறகு வெற்றி கிடைத்ததில் திரு. சார்ல்ஸ் சோங்குக்கு மகிழ்ச்சி. 

எதிர்த்தரப்பிடமிருந்த பொங்கோல் ஈஸ்ட் தொகுதியை தம் வசமாக்கியதில் அவருக்குப் பெருமிதம். 

ஏற்கனவே 6 முறை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த அனுபவம் கொண்டவர் திரு. சோங்.  

அவரை எதிர்த்துப் பொங்கோல் ஈஸ்ட்டில் போட்டியிட்டவர் பாட்டாளிக் கட்சியின் திருவாட்டி லீ லி லியென். 

1156 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றுள்ளார் திரு. சோங். 

இங்குள்ள தனித்தொகுதிகளில் இதுவே ஆகக் குறைவான வாக்கு வித்தியாசம். 
பொங்கோல் ஈஸ்ட் தொகுதிக்குப் பொலிவூட்டப் போவதாகச் சொன்னார் திரு. சோங்.  

தூய்மைக் கேடு, நிர்வாகச் சீர்குலைவு உட்பட பல அம்சங்கள் பற்றித் தொகுதி உலாவின்போது மக்கள் தம்மிடம் குறைபட்டதாகச் சொன்னார் திரு. சோங். 

பொங்கோல் ஈஸ்ட் நகரமன்ற நிர்வாகப் பொறுப்பை ஏற்கும் வரை அது பற்றி ஏதும் சொல்ல முடியாது என்று கூறிய திரு. சோங் தொகுதிக்கு மீண்டும் செழுமையைக் கொண்டு வரப்போவதாகத் தெரிவித்தார். 

ராடின் மாஸ் தனித்தொகுதியில் மக்கள் செயல் கட்சிக்கு அமோக வெற்றி. 
அங்குள்ள ஓரிடத்துக்கு மும்முனைப் போட்டி.

இருப்பினும் மக்கள் செயல் கட்சிக்கு வலுவான ஆதரவு.  

சீர்திருத்தக் கட்சியின் திரு. குமார் அப்பாவு, சுயேச்சை வேட்பாளர் திரு. ஹான் ஹூய் ஹூய். 

மக்கள் செயல் கட்சியின் திரு. சாம் டான் ஆகியோர் அங்கு போட்டியிட்டனர். 
ஆளும் கட்சிக்குக் கிடைத்த வாக்கு விகிதம் 77 விழுக்காடு. 

ஒப்புநோக்க கடந்த தேர்தலில் பெற்ற வாக்குகளை விட அது பத்து விழுக்காட்டுக்கும் அதிகம். 

ராடின் மாஸ் தொகுதி மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தத் தொடர்ந்து பாடுபடப்போவதாகச் சொன்னார் திரு. சாம் டான். 

ஈஸ்ட் குழுத்தொகுதியிலிருந்து பிரிந்து தனித்தொகுதியான ஃபெங்ஷான் இப்போது மக்கள் செயல் கட்சியின் வசம். 

38 வயது திருவாட்டி ஷெரில் சான் வெற்றியாளர். 

கடந்த 10 ஆண்டுகளாக தொகுதியின் அடித்தள அமைப்புகளில் முனைப்புடன் பணியாற்றியவர். 

திருவாட்டி சானை புதுமுகமாக ஃபெங்ஷானில் களமிறக்கியது மக்கள் செயல் கட்சி. 

எதிர்த்துப் போட்டியிட்டார் பாட்டாளிக் கட்சியின் திரு டெனிஸ் டான். 

57.5 விழுக்காட்டு வாக்குகள் பெற்று வாகை சூடினார் திருவாட்டி சான். 

ஹோகாங் தனித் தொகுதி மட்டும் பாட்டாளிக் கட்சியின் வசமானது. 

ஏற்கனவே அந்தத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. பிங் எங் ஹூவாட். 

57.69 விழுக்காட்டு வாக்குகள் பெற்று இம்முறையும் அவர் வென்றுள்ளார். 

எதிர்த்துப் போட்டியிட்டவர் மக்கள் செயல் கட்சியின் திரு. லீ ஹோங் சுவாங். 
அவருக்குக் கிடைத்த வாக்கு விகிதம் 42.31 விழுக்காடு.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்