Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

ம.செ.க: பாசிர் ரிஸ்-பொங்கோல் குழுத்தொகுதியில் வெற்றி உலா

துணைப் பிரதமர் திரு. தியோ சீ ஹியனும் அவரது பாசிர் ரிஸ்-பொங்கோல் குழுத் தொகுதியைச் சேர்ந்த குழுவினரும் இன்று, வெற்றி உலா வந்தனர். 

வாசிப்புநேரம் -

சிங்கப்பூர்: துணைப் பிரதமர் திரு. தியோ சீ ஹியனும் அவரது பாசிர் ரிஸ்-பொங்கோல் குழுத் தொகுதியைச் சேர்ந்த குழுவினரும் இன்று, வெற்றி உலா வந்தனர். பொதுத் தேர்தலில் தங்களை வெற்றி பெறச் செய்த குடியிருப்பாளர்களுக்கு அவர்கள் நன்றி தெரிவித்துக் கொண்டனர். 

பாசிர் ரிஸ் செண்ட்ரலில் உள்ள ஒரு காப்பிக் கடையில் திரு. தியோ தலைமையிலான குழுவினர் குடியிருப்பாளர்களைச் சந்தித்தனர். அங்கிருந்து அவர்கள், திறந்த வாகனமொன்றில் ஏறி, குடியிருப்புப் பேட்டைகளுக்கு ஊர்வலமாகச் சென்றனர்.

சிங்கப்பூர் ஜனநாயக் கூட்டணியை எதிர்த்துப் போட்டியிட்ட மக்கள் செயல் கட்சிக் குழு, சுமார் 73 விழுக்காட்டு வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றது. வாக்காளர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்றவாறு தொடர்ந்து செயல்பட வேண்டிய பொறுப்பு மக்கள் செயல் கட்சிக்கு இருப்பதாகத் திரு. தியோ செய்தியாளர்களிடம் தெரிவித்தார். 

எல்லாத் தரப்பு வாக்காளர்களும் வலுவான ஆதரவு தெரிவித்துள்ளதால், பொறுப்பு அதிகரித்துள்ளதாக அவர் சொன்னார். எதிர்க்கட்சிகளின் பிரசாரத்தை மீறி மக்கள் செயல் கட்சி வெற்றி பெற்றதற்குப் பல்வேறு காரணங்கள் இருந்ததாகச் சொன்னார் திரு. தியோ. 

பல்வேறு கட்சிகள் முன்வைத்த மாற்றுக் கொள்கைகள், திட்டங்களைப் பரிசீலித்த வாக்காளர்கள் அவற்றுள் எவை எவையெல்லாம் செயல்படுத்தக் கூடியவை என்று சிந்தித்துள்ளனர். தொலைநோக்குத் திட்டங்களைச் செயல்படுத்தும் ஆற்றல் யாருக்கு உள்ளது என்பதை யோசித்துப் பார்த்துள்ளனர். 

கடைசியாக, எந்தக் கட்சிக்கு சொன்னதைச் செய்துகாட்டும் நிரூபிக்கப்பட்ட வரலாறு உள்ளது என்பதைப் பார்த்து வாக்காளர்கள் முடிவு செய்துள்ளதாகச் சொன்னார் திரு. தியோ. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்