Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

ராடின் மாஸ், ஜாலான் புசார் - நன்றி உலா

ராடின் மாஸ் தனித்தொகுதியில், மக்கள் செயல் கட்சியின் திரு. சேம் டான் அமோக வெற்றி கண்டார். அவர், பிரதமர் அலுவலகத் துணையமைச்சரும் கூட. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க இன்று அவர் அத்தொகுதிக்குச் சென்றிருந்தார்.

வாசிப்புநேரம் -

சிங்கப்பூர்: ராடின் மாஸ் தனித்தொகுதியில், மக்கள் செயல் கட்சியின் திரு. சேம் டான் அமோக வெற்றி கண்டார். அவர், பிரதமர் அலுவலகத் துணையமைச்சரும் கூட. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க இன்று அவர் அத்தொகுதிக்குச் சென்றிருந்தார்.

தனித்தொகுதிகளில் போட்டியிட்ட வேட்பாளர்களில் ஆக அதிக வாக்குகளைப் பெற்றவர் திரு. டான்.அவருக்குச் சுமார் 77 விழுக்காட்டு வாக்குகள் கிடைத்தன.
ராடின் மாஸ் தனித்தொகுதியில் மும்முனைப் போட்டி இருந்தது. சீர்திருத்தக் கட்சியின் திரு குமார் அப்பாவு, சுயேச்சையான குமாரி ஹான் ஹுய் ஹுய் ஆகியோர் அங்கு போட்டியிட்டனர்.

கடும் புகைமூட்டத்துக்கு இடையில், ஜாலான் புசாரிலும் மக்கள் செயல் கட்சியின் நன்றி உலா. தொடர்பு, தகவல் அமைச்சர் டாக்டர் யாக்கோப் இப்ராஹிமின் தலைமையில் அங்கு மக்கள் செயல் கட்சி அணி களமிறங்கியது.

பாட்டாளிக் கட்சி அதனை எதிர்த்துப் போட்டியிட்டது. ஆனால், சுமார் 68 விழுக்காட்டு வாக்குகளைப் பெற்று, மக்கள் செயல் கட்சி, அந்தக் குழுத்தொகுதியைத் தன்வசமாக்கியது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்