Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

பிரசாரக் கூட்டங்கள்- படங்களும், வீடியோக்களும்

இன்று தேர்தலுக்கான கடைசி பிரசாரக் கூட்டங்கள் நடைபெற உள்ளன. மொத்தம் 14 பிரசாரக் கூட்டங்கள் இன்று நடைபெறும்.

வாசிப்புநேரம் -

இன்று தேர்தலுக்கான கடைசி பிரசாரக் கூட்டங்கள் நடைபெற உள்ளன. மொத்தம் 14 பிரசாரக் கூட்டங்கள் இன்று நடைபெறும்.

ஈஸ்ட் கோஸ்ட் குழுத் தொகுதி உட்பட மக்கள் செயல் கட்சி ஆறு பிரசாரக் கூட்டங்களை நடத்தவுள்ளது. பாட்டாளிக் கட்சியும் அதே குழுத் தொகுதிக்கான பிரசாரத்தை வேறு இடத்தில் நடத்தும்.

ராடின் மாஸ் குழுத் தொகுதி, அங் மோ கியோ குழுத் தொகுதி ஆகிய இரண்டு இடங்களில் சீர்திருத்தக் கட்சி பிரசாரக் கூட்டங்கள் நடத்தும்.


சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சி, சிங்கப்பூரர்களுக்கு முன்னுரிமை கட்சி, சிங்கப்பூர் மக்கள் கட்சி, சிங்கப்பூர் ஜனநாயகக் கூட்டணி, தேசிய ஒருமைப்பாட்டுக் கட்சி, மக்கள் சக்தி கட்சி ஆகியவை இன்று பிரசாரக் கூட்டங்களை நடத்தும்.

இன்று ஒரு பிரசாரக் கூட்டத்தை மட்டுமே நடத்தப் போவதாக சீர்திருத்தக் கட்சி கூறியது. பிரசாரக் கூட்டம் நடத்துவதற்காக இரண்டு இடங்கள் ஒதுக்கப்பட்டாலும், சீர்திருத்தக் கட்சி புளோக் 982, Buangkok Crescentல் மட்டுமே கூட்டத்தை நடத்த உள்ளது.

ஆக அண்மைய விவரங்களை அறிந்துகொள்ள செய்தி இணையவாசலுடன் தொடர்ந்த இணைந்திருங்கள். இரவு 7 மணி முதல் நேரடி ஒளிபரப்புகளை எங்களது இணையத் தளத்தில் நீங்கள் காணலாம். பிரசாரக் கூட்டங்களின் படங்கள், காணொளிகள் ஆகியவை இந்தப் பக்கத்தில் பார்வையிடலாம்.


இன்றைய பிரசாரக் கூட்டங்கள் பற்றிய தகவல் அடங்கிய தொலைக்காட்சி சிறப்புச் செய்தி, வசந்தம் ஒளிவழியிலும்  ஒலி 96.8 லும் இரவு 11.30 மணிக்கு நேரடியாக ஒளியேறும்.


ஜாலான் புசார்   குழுத்தொகுதி - மக்கள் செயல் கட்சி

புளோக் 4 பூன் கெங் ரோட்டுக்கு அருகிலுள்ள திடலில்   பிரசாரக் கூட்டம் நடைபெறுகிறது.

ஹாலந்து-புக்கிட் தீமா குழுத்தொகுதி -  சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சி

கிளமெண்டி அவென்யூ 6க்கு அருகிலுள்ள திடலில் பிரசாரக் கூட்டம்  நடைபெறுகிறது.

தஞ்சோங் பாகார் குழுத்தொகுதி - சிங்கப்பூரர்களுக்கு முன்னுரிமைக் கட்சி

குவீன்ஸ்டவுன்  விளையாட்டரங்கில் பிரசாரக் கூட்டம்  நடைபெறுகிறது.

பொத்தோங் பாசிர் தனித்தொகுதி - மக்கள் செயல் கட்சி

பொத்தோங் பாசிர் அவென்யூ 1க்கு அருகிலுள்ள திடலில் நடைபெறுகிறது.

பீஷான்-தோபாயோ குழுத்தொகுதி - சிங்கப்பூர் மக்கள் கட்சி

பீஷான் விளையாட்டரங்கில்  பிரசாரக் கூட்டம்  நடைபெறுகிறது.

அங் மோ கியோ  குழுத்தொகுதி - சீர்திருத்தக் கட்சி

புவாங்கோக் கிரெசண்டுக்கு அருகிலுள்ள திடலில் பிரசாரக் கூட்டம் நடைபெறுகிறது.

மெக்பர்சன்  தனித்தொகுதி - மக்கள் செயல் கட்சி

தீவு விரைவுச்சாலை, பயா லேபார் ரோடு, சர்க்கிட் ரோடு ஆகியவற்றுக்கு அருகிலுள்ள திடலில் பிரசாரக் கூட்டம் நடைபெறுகிறது.

ஈஸ்ட் கோஸ்ட்  குழுத்தொகுதி - பட்டாளிக் கட்சி

பிடோ விளையாட்டரங்கில் பிரசாரக் கூட்டம்  நடைபெறுகிறது. 

ஈஸ்ட் கோஸ்ட்  குழுத்தொகுதி - மக்கள் செயல் கட்சி

சீமெய்  ரோட்டுக்கு அருகிலுள்ள திடலில் நடைபெறுகிறது.

பாசிர் ரிஸ்-பொங்கோல் குழுத்தொகுதி - சிங்கப்பூர் ஐனநாயகக் கூட்டணி

பாசிர் ரிஸ் பூங்காவில் பிரசாரக் கூட்டம் நடைபெறுகிறது.

தெம்பனீஸ் குழுத்தொகுதி - தேசிய ஒருமைப்பாட்டுக் கட்சி

நீ ஆன் உயர்நிலைப் பள்ளித் திடலில் பிரசாரக் கூட்டம் நடைபெறுகிறது.

சுவா சூ காங்  குழுத்தொகுதி - மக்கள் சக்திக் கட்சி  

சுவா சூ காங் உயர்நிலைப் பள்ளித் திடலில் பிரசாரக் கூட்டம் நடைபெறுகிறது.

புக்கிட் பாஞ்சாங்  தனித்தொகுதி - மக்கள் செயல் கட்சி

பெட்டிர் ரோட்டுக்கு அருகிலுள்ள திடலில் பிரசாரக் கூட்டம் நடைபெறுகிறது.

மார்சிலிங்-இயூ டீ குழுத்தொகுதி - மக்கள் செயல் கட்சி

உட்லண்ட்ஸ் விளையாட்டரங்கில் பிரசாரக் கூட்டம் நடைபெறுகிறது.






விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்