Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

கட்சிகளுக்கு உதவும் தொண்டூழியர்கள்

பொதுத் தேர்தல் கட்சிகளுக்கும் வேட்பாளர்களுக்கும் மட்டும் பரபரப்பான காலகட்டம் அல்ல.

வாசிப்புநேரம் -

பொதுத் தேர்தல் கட்சிகளுக்கும் வேட்பாளர்களுக்கும் மட்டும் பரபரப்பான காலகட்டம் அல்ல.

தொண்டூழியர்களுக்கும், சமூக ஆர்வலர்களுக்கும் தான்.

பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டதிலிருந்து  அறிவிக்கப்பட்டது இலிருந்து இரு சாராரும் பல்வேறு கட்சிகளுடன் இணைந்து ஆதரவு திரட்டி வருகின்றனர்.

55 வயது திரு சியாங் ஹெங் லியாங், வார இறுதிப் பகல் பொழுதுகளில், வழக்கமாகத் தமது குடும்பத்துடன் நேரத்தைச் செலவிடுவார்.

ஆனால், வேட்புமனுத் தாக்கல் தினத்திலிருந்து, ஜாலான் புசார் குழுத்தொகுதியில் அவர் மக்கள் செயல் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்ட உதவி வருகிறார். 

ஜாலான் புசார் குழுத்தொகுதிக்கான, அக்கட்சியின் முதன்மைத் தேர்தல் முகவரான திரு ஹெங், 600 தொண்டூழியர்களை வழிநடத்துகிறார். 

தேர்தல் பிரசாரத்தில், கட்சிக்கு உதவ, தமது வேலையிலிருந்து இரண்டு வாரம் விடுப்பு எடுத்துள்ளார் திரு சியாங். 

சிங்கப்பூரை அதிகம் நேசிப்பதாகக் கூறும் அவர், அவ்வாறு உதவுவது மனநிறைவாக இருப்பதாகக் கூறினார். 

தேர்தல் காலத்தின்போது, கடினமாக உழைக்கும் தொண்டூழியர்களின் நலனைக் கவனித்துக்கொள்ளும் பொறுப்பு 72 வயது திருவாட்டி ஊனுடையது.  

அவர், தொண்டூழியர்களுக்குப் பல்வேறு உணவுவகைகளைச் சமைத்துத் தருகிறார். 

சிங்கப்பூரர்களுக்கு முன்னுரிமைக் கட்சியின் 50 தொண்டூழியர்களுள் ஒருவர் கட்டடக் கலைஞர் திரு. வின்ஸ்ட்டன் லிம். 

கட்சியின் சமூக ஊடகத் தளங்களைக் கண்காணிப்பது அவரது பணி. 

வேலைக்கு இடையே கட்சிப் பணியையும் பார்த்துக்கொள்வது சற்று சிரமமாக இருந்தாலும் நாட்டிற்காக உழைப்பது சுகமே என்கிறார் திரு லிம். 

சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சிக்காக, 200க்கும் மேற்பட்ட தொண்டூழியர்கள் இரவு பகல் பாராது உழைத்து வருகின்றனர். 

திருவாட்டி சூசன் பெரேரா, 8 மாதங்களுக்கு முன்னர் கட்சியில் தொண்டூழியராகச் சேர்ந்தார். 

கட்சியின் நிர்வாகக் குழுவில் இருக்கும் அவர், பிரசாரங்களின்போது, கட்சி சார்ந்த பொருட்களை விற்க உதவுகிறார். 

உடலளவில் களைப்பாக இருந்தாலும், சிங்கப்பூரர்களுடன் இணைந்து மனதார வேலை செய்வதில் தமக்கு மகிழ்ச்சியே என்கிறார் திருவாட்டி சூசன். 

வாக்களிப்பு நாளுக்கு இன்னும் இரண்டு நாட்களே இருக்கும் வேளையில், வேட்பாளர்களுக்குச் சிறந்த முறையில் உதவ  இரட்டிப்பு முயற்சி எடுக்கப் போவதாகக் கூறுகின்றனர்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்