Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

தேர்தல் விவரங்கள்: மீடியகார்ப்பின் அனைத்துத் தளங்களில் நேரடி ஒளிபரப்பு

பொதுத் தேர்தலின் அண்மை விவரங்களை வாக்களிப்பு தினத்தன்று  மீடியாகார்ப்பின் அனைத்துத் தளங்களும் நேரடியாக வழங்கவிருக்கின்றன. 

வாசிப்புநேரம் -

பொதுத் தேர்தலின் அண்மை விவரங்களை வாக்களிப்பு தினத்தன்று  மீடியாகார்ப்பின் அனைத்துத் தளங்களும் நேரடியாக வழங்கவிருக்கின்றன. 

இணையத்தளம், தொலைக்காட்சி, வானொலி, Toggle ஆகியவற்றில் நான்கு அதிகாரத்துவ மொழிகளிலும் அவை வழங்கப்படும்.

"சிங்கப்பூர் வாக்களிக்கிறது 2015 - முடிவுகள்" எனும் தலைப்பில் வசந்தம் ஒளிவழியில் சிறப்பு நேரடி நிகழ்ச்சி ஒளிபரப்பப்படும்.

அது இரவு 10.30 மணியிலிருந்து பதினொரு மணி வரைக்கும், பின்னர் பின்னிரவு 12.30 மணியிலிருந்து இறுதி முடிவுகள் வரும்வரை இடம்பெறும்.
ஒலி 96.8இலும் அது நேரடியாக ஒலிபரப்பப்படும்.

வசந்தம் நிகழ்ச்சிகளின்போது தேர்தல் முடிவுகள் குறித்த துணைவாசகங்களும் இடம்பெறும். 

அத்துடன் செய்தி இணையவாசலிலும் செயலியிலும் உடனுக்குடன் தேர்தல் முடிவுகளைத் தெரிந்துகொள்ளலாம்.

சேனல் நியூஸ்ஏஷியாவில் Singapore Votes 2015 - Results என்ற நிகழ்ச்சி இரவு 9 மணிக்குத் தொடங்கும். 

ஒளிவழி ஐந்திலும் அது ஒளிபரப்பாகும்.
சேனல் நியூஸ்ஏஷியா இணையத்தளத்திலும், Toggle.sg/sgvotes2015 slash sg votes 2015>> எனும் இணையப்பக்கத்திலும் அண்மை நிலவரம் குறித்து தெரிந்துகொள்ளலாம்.

938 LIVE வானொலியில் பொதுத் தேர்தலுக்கான சிறப்பு நிகழ்ச்சி இரவு 9.30  மணிக்கு தொடங்கவிருக்கிறது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்