Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

"வலுவான தலைமைத்துவம் - எல்லா வகையிலும் முன்னணியில் இருப்பது"

வலுவான தலைமைத்துவம் என்பது எல்லா வகையிலும் முன்னணியில் இருப்பது என்று துணைப் பிரதமர் திரு. தர்மன் சண்முகரத்னம் கூறியுள்ளார்.

வாசிப்புநேரம் -

வலுவான தலைமைத்துவம் என்பது எல்லா வகையிலும் முன்னணியில் இருப்பது என்று துணைப் பிரதமர் திரு. தர்மன் சண்முகரத்னம் கூறியுள்ளார்.

பிடோ விளையாட்டரங்கில் மக்கள் செயல் கட்சியின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அவர் உரையாற்றினார்.

வலுவான தலைமைத்துவம் என்பது காது கொடுத்துக் கேட்பது.

மாற்றங்களுக்கேற்ப தொடர்ந்து மாற்றிக்கொள்வது. அதே நேரம் அனைத்திலும் முன்னணி வகிப்பது என்றார் திரு. தர்மன்.

திறமைக்கு முன்னுரிமை அளிப்பது பற்றியும் அவர் பேசினார்.

சிங்கப்பூரில் பிறக்கும்போது உங்கள் தலைவிதி நிர்ணயிக்கப்படுவதில்லை.

அது வாழ்க்கைப் பயணத்தின் தொடக்கம்தான் என்று கூறினார்.

அவரவர் திறமைக்கு ஏற்றவாறு முன்னேறலாம்.

அதுவே உண்மையில் திறமைக்கு வெகுமதியளிப்பதாகும். எல்லாரின் நன்மைக்கும் ஏற்ற சரியான பாதையில் தொடர்ந்து செல்ல உங்கள் ஆதரவு தேவை என்றார் துணைப் பிரதமர் திரு. தர்மன். 

அதே கூட்டத்தில் பேசிய மனிதவள அமைச்சர் திரு. லிம் சுவீ சே நல்ல கொள்கைகள் வேண்டுமா நல்ல அரசியல் வேண்டுமா என்பதை மக்கள் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும் என்றார்.  

எந்தவொரு தேர்தலிலும் மாற்றத்தை எதிர்பார்த்தே பெரும்பாலோர் வாக்களிப்பதாகச் சொன்ன அமைச்சர், வரும் 5 ஆண்டுகள் கடந்த 5 ஆண்டுகளைக் காட்டிலும் சிறப்பாக இருக்க வேண்டும் என்றே வாக்காளர்கள் விரும்புவதாகக் கூறினார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்