Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

"நம்பிக்கையைத் தூண்டும் கொள்கைகளையே முன்வைத்துள்ளோம்" - டாக்டர் சீ

சிங்கப்பூர் ஜனநாயக கட்சியின் தலைமைச் செயலாளர் டாக்டர் Chee Soon Juan, நம்பிக்கையைத் தூண்டும் கொள்கைகளை தமது கட்சி முன்வைத்துள்ளதாகவும் அச்சத்தைத் தூண்டுபவற்றை அல்ல என்றும் கூறியுள்ளார். 

வாசிப்புநேரம் -

சிங்கப்பூர் ஜனநாயக கட்சியின் தலைமைச் செயலாளர் டாக்டர் Chee Soon Juan, நம்பிக்கையைத் தூண்டும் கொள்கைகளை தமது கட்சி முன்வைத்துள்ளதாகவும் அச்சத்தைத் தூண்டுபவற்றை அல்ல என்றும் கூறியுள்ளார். 

ஹாலந்து- புக்கிட் தீமா குழுத்தொகுதிக்கான பிரசாரக் கூட்டத்தில் அவர் பேசினார்.

14 ஆண்டுகளுக்குப் பிறகு பொதுத் தேர்தலில் போட்டியிடுகிறார் டாக்டர் சீ. குடியிருப்பாளர்களுடன் கலந்துரையாடிய கடந்த ஒரு வாரத்தை,  பூரிப்பான தருணம் என்று அவர் வருணித்தார். 

மக்கள் செயல் கட்சியின் கொள்கைகளால் விலைவாசி கூடிவிட்டதாகவும் மத்திய சேம நிதிப் பணத்தை முழுமையாக மீட்க முடியவில்லை என்றும்  டாக்டர் சீ கூறினார். 

நாடாளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டால், மூன்று அம்சங்களில் தமது கட்சி கவனம் செலுத்தும் என்றார் அவர். 

சிங்கப்பூரர்களுக்கு வேலைகளில் முன்னுரிமை தருவது ஒன்று. 

இரண்டு, வீட்டு விலையைக் குறைக்க வீடமைப்பு வளர்ச்சிக் கழக புதிய வீடுகளின் நிலக் கட்டணத்தை அகற்றுவது.  

மத்திய சேமநிதிக் குறைந்தபட்சத் தொகையை அகற்றுவது  மூன்றாவது அம்சம் என்றார் டாக்டர் சீ. 

கிளமெண்டி அவென்யூ 6ல் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் ஹாலந்து புக்கிட் தீமா குழுத்தொகுதிக்கான மற்றொரு வேட்பாளர் டாக்டர் பால் தம்பையாவும் பேசினார். 

ஒரு தொகுதியில் பலதுறை மருந்தகம், ரயில் சேவை போன்ற புதிய வசதிகள் அமைக்கப்படுவதற்கு தாங்கள் காரணம் என்று வேட்பாளர்கள் கூறுவது விசித்திரமானது என்றார் அவர். 

ஒரு தொகுதி எதிர்க்கட்சிகளின் வசம் சென்றாலும், அங்கு பேருந்துகள் செல்லும், பலதுறை மருந்தகம் கட்டப்படும் என்று டாக்டர் தம்பையா கூறினார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்