Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

தொழில்முனைப்பையும் பரிவு உணர்வையும் வலியுறுத்தும் வரவு செலவுத் திட்டம்

நிதியமைச்சர் ஹெங் சுவீ கியேட் தொழில்முனைப்பையும் பரிவுணர்வையும் வலியுறுத்தி, இந்த ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்ட விவாதத்தை நிறைவுசெய்துவைத்துள்ளார். கடந்த இரண்டு நாட்களாக விவாதம் நடந்தது.

வாசிப்புநேரம் -

சிங்கப்பூர்: நிதியமைச்சர் ஹெங் சுவீ கியேட் தொழில்முனைப்பையும் பரிவுணர்வையும் வலியுறுத்தி, இந்த ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்ட விவாதத்தை நிறைவுசெய்துவைத்துள்ளார். கடந்த இரண்டு நாட்களாக விவாதம் நடந்தது.

ஐம்பதுக்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் வரவுசெலவுத் திட்டம் 2016- குறித்த கேள்விகளை எழுப்பினர். சிங்கப்பூர் அடுத்த ஐம்பதாண்டை நோக்கிச் செல்லும் பயணத்தின் ஆரம்பம், இந்த ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம் என்று திரு Heng குறிப்பிட்டார்.

கடந்த சில நாட்களாக மன்ற உறுப்பினர்கள் பேசியதைக் கேட்ட பிறகு, அனைவரும் செல்லும் திசை தெளிவாகத் தெரிகிறது என்றார் அவர். அத்துடன் இலக்கை நோக்கி அனைவரும் ஒன்றாகப் பயணம் செய்வதற்கான கடப்பாடு பிரதிபலிக்கப்பட்டதாகவும் திரு Heng கூறினார். விவாதத்தின்போது, மாற்றங்களுக்கு இடையே சிங்கப்பூரர்களுக்கு நல்ல வேலைகள் இருக்குமா என்று சில மன்ற உறுப்பினர்கள் கேட்டிருந்தனர்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்