Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

இல்ல மேம்பாட்டுத் திட்டத்தின் தற்போதைய நிலவரம்

இல்ல மேம்பாட்டுத் திட்டத்திற்குத் தகுதிபெறும் ஆக அதிக எண்ணிக்கையிலான கழக வீடுகளைக் கொண்டிருக்கும் மூன்று நகரமன்றங்களில் அல்ஜுனிட் ஹோகாங்கும் (Aljunied-Hougang) ஒன்று.

வாசிப்புநேரம் -

சிங்கப்பூர்: இல்ல மேம்பாட்டுத் திட்டத்திற்குத் தகுதிபெறும் ஆக அதிக எண்ணிக்கையிலான கழக வீடுகளைக் கொண்டிருக்கும் மூன்று நகரமன்றங்களில் அல்ஜுனிட் ஹோகாங்கும் (Aljunied-Hougang) ஒன்று.

ஜூரோங் கிளமெண்டியும் (Jurong-Clementi) நீ சூனும் (Nee Soon) மற்ற இரண்டு நகரமன்றங்கள். தேசிய வளர்ச்சிக்கான மூத்த துணையமைச்சர் திரு. டெஸ்மண்ட் லீ அந்தத் தகவலை இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். பாட்டாளிக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் திரு. பிரித்தாம் சிங் (Pritam Singh) கேட்ட கேள்விக்குத் திரு. டெஸ்மண்ட் லீ (Desmond Lee) பதிலளித்தார்.

1986ஆம் ஆண்டுவரை கட்டப்பட்ட வீடுகள், முக்கிய மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் வரவில்லையென்றால் அவை Home Improvement Programme எனப்படும் இல்ல மேம்பாட்டுத் திட்டத்திற்குத் தகுதிபெறலாம் என்று அவர் குறிப்பிட்டார்.

இல்ல மேம்பாட்டுத் திட்டத்துக்குத் தகுதிபெறும் வீடுகளைத் தெரிவுசெய்யும் பணியை 2018ஆம் நிதியாண்டுக்குள் நிறைவேற்றக்^ கழகம் திட்டமிட்டுள்ளதாகத் திரு. லீ சொன்னார். அந்த இலக்கை அடைவதற்கு, குறிப்பிடப்பட்ட மூன்று நகர மன்றங்களுடன் மட்டுமல்லாமல் மேம்பாட்டுக்குத் தகுதிபெறும் வீடுகள்^ இன்னமும் உள்ள அனைத்து நகர மன்றங்களுடனும் கழகம் இணைந்து பணியாற்றி வருவதாக அவர் தெரிவித்தார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்