Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

மின்னியல் கழிவு குறித்த புதிய ஆய்வு(வீடியோ)

E-Waste எனப்படும் மின்னியல் கழிவு குறித்து தேசியச் சுற்றுப்புற அமைப்பு மேற்கொண்டுள்ள புதிய ஆய்வு அடுத்த ஆண்டின் முதல் காலாண்டில் முடிவுறும்.

வாசிப்புநேரம் -

E-Waste எனப்படும் மின்னியல் கழிவு குறித்து தேசியச் சுற்றுப்புற அமைப்பு மேற்கொண்டுள்ள புதிய ஆய்வு அடுத்த ஆண்டின் முதல் காலாண்டில் முடிவுறும்.

சுற்றுப்புற, நீர்வள மூத்த துணை அமைச்சர் டாக்டர் ஏமி கோர் நாடாளுமன்றத்தில் அது குறித்து பேசினார்.

அபாயகரமான பொருட்களின் பயனீட்டைக் கட்டுப்படுத்துவதில் புதிய ஆய்வு கவனம் செலுத்தும் என டாக்டர் ஏமி கோர் கூறினார்.

கைபேசிகள், கணினிகள், குளிர்ப்பதனப் பெட்டிகள், குளிர்சாதனங்கள், தொலைக்காட்சிகள், துணி துவைக்கும் இயந்திரங்கள்.

இந்த ஆறு மின்னியல் சாதனங்களில் அபாயகரமான பொருட்கள் பயன்படுத்தப்படுவது கட்டுப்படுத்தப்படும்.

பயன்படுத்தப்படாத கைபேசிகளிலும் கணினிகளிலும் தங்கம், பலேடியம் போன்ற விலை உயர்ந்த உலோகங்கள் உள்ளன.

அதே வேளை, அவற்றுள் சிறிய அளவில் அபாயகரமான பொருட்களும் இருக்கவே செய்கின்றன.

அவற்றால் பல தூய்மைக்கேடுகளும், சுகாதாரப் பிரச்சினைகளும் ஏற்படலாம் எனக் கூறினார் டாக்டர் கோர்.

2018ஆம் ஆண்டிலிருந்து "பாதரசம்" சேர்க்கப்பட்டுள்ள மின்கலன்களுக்குத் தடை விதிக்கப்படும்.

பாதரசம் உள்ள மின்விளக்குகள், வெப்பமானி ஆகியவையும் 2020ஆம் ஆண்டுக்குள் தடை செய்யப்படும்.

அடுத்த ஆண்டு வெளியாகவிருக்கும் புதிய ஆய்வின் முடிவுகள், சிங்கப்பூரர்கள் எந்த அளவுக்கு மின்னியல் கழிவுகளை மறுபயனீடு செய்கின்றனர் என்பது பற்றிய முக்கிய தகவல்களை அளிக்கும்.

அதனடிப்படையில் மின்னியல் கழிவு சேகரிப்பு, மறுபயனீடு, நிர்வகிப்பு ஆகியவற்றுக்கான நாடு தழுவிய திட்டம் செயல்படுத்தப்படும் என்றார் டாக்டர் கோர். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்