Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

ஜூரோங்கில் 5ஆவது கடல் நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கத் திட்டம்

ஜூரோங் தீவில் ஐந்தாவது கடல் நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பது பற்றி ஆராயப்படுகிறது. 

வாசிப்புநேரம் -
ஜூரோங்கில் 5ஆவது கடல் நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கத் திட்டம்

ஜூரோங் தீவில் ஐந்தாவது கடல் நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பது பற்றி ஆராயப்படுகிறது. (படம்: Ngau Kai Yan)

ஜூரோங் தீவில் ஐந்தாவது கடல் நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பது பற்றி ஆராயப்படுகிறது.

சிங்கப்பூரின் தண்ணீர்ப் பாதுகாப்பை மேம்படுத்துவது அதன் நோக்கம்.

தண்ணீர்ச் சேமிப்பு நடைமுறைகள் அறிமுகமாகும் சூழலில், 2030ஆம் ஆண்டுக்குள் புதுநீர், சுத்திகரிப்பு ஆலை ஆகியவற்றின் மொத்தக் கொள்ளளவை இரட்டிப்பாக்குவது இலக்கு.

சுற்றுப்புற, நீர்வள அமைச்சர் திரு. மசகோஸ் ஸூல்கிஃப்லி அது பற்றி இன்று நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.

தற்போது சிங்கப்பூருக்கு ஒவ்வொரு நாளும் 430 மில்லியன் கேலன் தண்ணீர் தேவை.

2060ஆம் ஆண்டில் இந்த அளவு இரு மடங்கைத் தாண்டும் என்பது கணிப்பு. தொழில்துறைக்கான தண்ணீர்த் தேவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 

அதற்கான மொத்தத் தண்ணீர்த் தேவை 55லிருந்து 70 விழுக்காடாக உயர்ந்துள்ளது. 

நாட்டின் தண்ணீர்த் தேவை அதிகரித்துவரும் நிலையில் பருவ மாற்றம் புதிய சவால்களை ஏற்படுத்தியிருப்பதாகத் திரு. மசகோஸ் சொன்னார். 

பொதுப் பயனிட்டுக் கழகம் தண்ணீர்ப் பெருந்திட்டத்தின் மறு ஆய்வை நிறைவுசெய்திருப்பதாகவும் அவர் கூறினார். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்