Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

திறனாளர்களை ஈர்க்கும் முயற்சியில் கடல்துறை, துறைமுக ஆணையம்

கடல்துறை, துறைமுக ஆணையம், அடுத்த ஈராண்டில் துறைசார்ந்த உள்ளூர்த் திறனாளர்களை ஈர்த்து, உருவாக்கி, தங்கவைத்துக்கொள்ள 12 மில்லியன் வெள்ளியை ஒதுக்கவிருக்கிறது. 

வாசிப்புநேரம் -
திறனாளர்களை ஈர்க்கும் முயற்சியில் கடல்துறை, துறைமுக ஆணையம்

புதிய மனிதவளத் திட்டத்திங்களிலிருந்து சுமார் ஐயாயிரம் தனிநபர்கள் பலன் பெறுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. (படம்: AFP/Roslan Rahman)

கடல்துறை, துறைமுக ஆணையம், அடுத்த ஈராண்டில் துறைசார்ந்த உள்ளூர்த் திறனாளர்களை ஈர்த்து, உருவாக்கி, தங்கவைத்துக்கொள்ள 12 மில்லியன் வெள்ளியை ஒதுக்கவிருக்கிறது.

போக்குவரத்து மூத்த துணையமைச்சர் ஜோசபின் தியோ அதனை அறிவித்தார்.

புதிய மனிதவளத் திட்டத்திங்களிலிருந்து சுமார் ஐயாயிரம் தனிநபர்கள் பலன் பெறுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அவை அடுத்த மாதத்திலிருந்து கட்டங்கட்டமாக அறிமுகப்படுத்தப்படும்.

அவற்றுள் ஒன்று, புதிய கடல்துறை வாழ்க்கைத்தொழில் மாற்றுத் திட்டம்.

கடல்சார் தொழில்துறையில் தரமான வேலைகளில் சேரவும் திறனை மேம்படுத்திக்கொள்ளவும் சிங்கப்பூரர்களுக்கும் சிங்கப்பூர் நிரந்தரவாசிகளுக்கும் உதவுவது அதன் நோக்கம்.

புதிய பட்டதாரிகளும் துறை மாறுவோரும் பயிற்சித் திட்டத்தில் சேர்வதற்காகும் செலவில், ஒரு பகுதியைக் கடல்துறை, துறைமுக ஆணையம் ஏற்றுக்கொள்ளும்.

அத்தகைய ஊழியர்களை நிறுவனங்கள் வேலைக்கு எடுத்துக்கொள்வதும் ஊக்குவிக்கப்படும்.

முதல் ஆறு மாதங்களுக்கு அவர்களின் சம்பளத்தில் பாதியை, ஆணையம் செலுத்தும்.

சுமார் நூறிலிருந்து 120 பேர் அந்தத் திட்டத்தின் மூலம் பலன்பெறுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்