Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

பத்தில் 6 பொறியாளர்கள் சிங்கப்பூரர்கள், நிரந்தரவாசிகள்

கடந்தாண்டு ஜூன் மாத நிலவரப்படி 122,550 பேர் பொறியாளர் பணியில் அமர்த்தப்பட்டிருந்தனர்.

வாசிப்புநேரம் -
பத்தில் 6 பொறியாளர்கள் சிங்கப்பூரர்கள், நிரந்தரவாசிகள்

கடந்தாண்டு ஜூன் மாத நிலவரப்படி 122,550 பேர் பொறியாளர் பணியில் அமர்த்தப்பட்டிருந்தனர். (படம்: Kenji Soon/

கடந்தாண்டு ஜூன் மாத நிலவரப்படி 122,550 பேர் பொறியாளர் பணியில் அமர்த்தப்பட்டிருந்தனர்.

அதில், பத்தில் 6 பேர் சிங்கப்பூரர்களும் நிரந்தரவாசிகளும் என மனிதவளத் துணையமைச்சர் தியோ செர் லக் இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

சிங்கப்பூரில் தற்போது எத்தனை பொறியாளர்கள் வேலை செய்கின்றனர், அதில் எத்தனை பேர் சிங்கப்பூரர்கள், நிரந்தரவாசிகள், வெளிநாட்டினர் என்ற நாடாளுமன்ற உறுப்பினர் லீ பீ வாவின் கேள்விக்கு அமைச்சர் தியோ பதிலளித்தார்.

சிங்கப்பூரின் உள் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும், உற்பத்தி, தொலைத்தொடர்பு ஆகிய முக்கியத் துறைகளை வளர்க்கவும் பொறியாளர்கள் முக்கியப் பங்கு வகிப்பதாக அவர் தெரிவித்தார்.

முன்னேற்றத்துக்கு மேலும் வாய்ப்புகளை ஏற்படுத்துதல், திறன் அங்கீகார நடைமுறைகளை வலுப்படுத்துதல் போன்றவற்றால் அதிக சிங்கப்பூரர்களைப் பொறியாளர் துறைக்கு ஈர்க்க மனிதவள அமைச்சு நோக்கம் கொண்டுள்ளதாகத் திரு தியோ கூறினார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்