Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

அனைத்துலகப் பள்ளிகளில் 80 % வெளிநாட்டவர்கள்

சிங்கப்பூர், அனைத்துலக முதலீட்டுக்கு ஏற்ற கவர்ச்சிகரமான இடமாகத் தொடர்ந்து திகழ, இங்குள்ள அனைத்துலகப் பள்ளிகள் முக்கியம்.

வாசிப்புநேரம் -
அனைத்துலகப் பள்ளிகளில் 80 % வெளிநாட்டவர்கள்

சிங்கப்பூரில் உள்ள ஒரு அனைத்துலகப் பள்ளியின் கோப்புப் படம்

சிங்கப்பூர், அனைத்துலக முதலீட்டுக்கு ஏற்ற கவர்ச்சிகரமான இடமாகத் தொடர்ந்து திகழ, இங்குள்ள அனைத்துலகப் பள்ளிகள் முக்கியம்.

வர்த்தக, தொழில் அமைச்சுக்கான நாடாளுமன்றச் செயலாளர் திருவாட்டி லோ யென் லிங், இன்று நாடாளுமன்றத்தில் அதனைத் தெரிவித்தார்.

இவ்வாண்டு ஜனவரி மாத நிலவரப்படி, இங்குள்ள அனைத்துலகப் பள்ளிகளில், சுமார் 46,500 மாணவர்கள் பயில்கின்றனர்.

அவர்களில் கிட்டத்தட்ட 80 விழுக்காட்டினர் வெளிநாட்டினர். 

அனைத்துலகப் பள்ளிகளில் தேவைப்படும் இடங்கள் குறித்து, பொருளியல் வளர்ச்சிக் கழகம், ஆண்டுதோறும் பரிசீலனை நடத்தி வருவதாகச் சொன்னார் திருவாட்டி லோ. 

பல்வேறு நாடுகளில் இருந்து சிங்கப்பூருக்கு வரும் குடும்பங்களுக்குப் போதிய எண்ணிக்கையில் பள்ளி இடங்கள் உள்ளனவா என்பதை உறுதிப்படுத்துவது அதன் இலக்கு. 

வருங்காலத்தில், பொருளியல் வளர்ச்சிக்கு ஆதரவாகத் தனியார் கல்வித் துறையை ஊக்குவிக்க, அரசாங்கம் திட்டமிடுவதாகவும் அவர் சொன்னார். 

தனியார் கல்வி நிறுவனங்கள் துறை என்பது சந்தையின் தேவைக்கு ஏற்ப மாறக் கூடியது என்பதை அவர் சுட்டினார். 

அதன் குறைந்தபட்சத் தரம் உயர்த்தப்பட்டதைத் தொடர்ந்து தற்போது அந்தத் துறை, தன்னைச் சீரமைத்துக் கொண்டு வருகிறது. 

இங்குள்ள தனியார் கல்வி நிறுவனங்கள், அனைத்துலக அளவில் விரிவடைய விரும்பினால், அதற்கான ஆதரவை, IE Singapore அமைப்பு வழங்கி வருவதாகவும் திருவாட்டி லோ கூறினார்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்