Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

"சிங்கப்பூர்-மலேசியாவை இணைக்கும் பாதையை மாற்றி அமைக்க திட்டம் இல்லை"

சிங்கப்பூரையும் மலேசியாவையும் இணைக்கும் பாதையை மாற்றி அமைப்பது குறித்த திட்டம் இல்லை என்று வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் தெரிவித்திருக்கிறார். 

வாசிப்புநேரம் -
"சிங்கப்பூர்-மலேசியாவை இணைக்கும் பாதையை மாற்றி அமைக்க திட்டம் இல்லை"

உட்லண்ஸ் சோதனைச் சாவடியின் கோப்புப் படம்

சிங்கப்பூரையும் மலேசியாவையும் இணைக்கும் பாதையை மாற்றி அமைப்பது குறித்த திட்டம் இல்லை என்று வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் தெரிவித்திருக்கிறார்.

தற்போதுள்ள பாதை போதுமானதாய் இருப்பதாக அவர் சொன்னார்.

இரு நாட்டு அரசாங்கங்களும் அது குறித்து கூட்டு ஆய்வை மேற்கொண்டு, பின்னர் தனிப்பட்ட முடிவுகளை வெளியிட்டதைத் தொடர்ந்து அந்த முடிவுக்கு வந்ததாய் டாக்டர் பாலகிருஷ்ணன் சொன்னார்.

நாடாளுமன்றத்தில் நடைபெறும் ஒதுக்கீட்டுக் குழு விவாதத்தில், அவர் அது குறித்துப் பேசினார்.

இருப்பினும், இணைப்புப் பாதையில் நெரிசலைத் தவிர்க்கவும், சோதனைச் சாவடிகளின் திறனை மேம்படுத்தவும், இரு நாட்டு அரசாங்கங்களும் தொடர்ந்து முயற்சி எடுக்கும் என்றார் டாக்டர் விவியன்.

சோதனைச் சாவடிகளில் தொழில்நுட்பம், உள் கட்டமைப்பு போன்றவற்றை மேம்படுத்துவதன் மூலம் அது சாத்தியமாகும் என்றார் வெளியுறவு அமைச்சர்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்