Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

போட்டிகளின் 4ம் நாள்

இன்று காலை, Canoeing எனும் படகுப் போட்டியில், ஆண்கள் மற்றும் பெண்கள் ஒற்றையருக்கான K1- 200 மீட்டர் பிரிவில், சிங்கப்பூரின் Mervyn Toh-உம், Sarah Chen-உம் தங்கப் பதக்கங்களை வென்றனர். 

வாசிப்புநேரம் -

சிங்கப்பூர்: இன்று காலை, Canoeing எனும் படகுப் போட்டியில், ஆண்கள் மற்றும் பெண்கள் ஒற்றையருக்கான K1- 200 மீட்டர் பிரிவில், சிங்கப்பூரின் Mervyn Toh-உம், Sarah Chen-உம் தங்கப் பதக்கங்களை வென்றனர். இரட்டையருக்கான C2 - 200 மீட்டர் பிரிவில், குடியரசின் Tan Chin Chuen, Chong Koi Kiat அணியினர் வெள்ளி பதக்கத்தைப் பெற்றனர். 

தேசிய விளையாட்டரங்கில் நடைபெற்ற திடல்தடத் தேர்வுச் சுற்றுகளில், சிங்கப்பூரின் Amirudin Jamal-உம், Calvin Kang-உம் இன்றிரவு நடைபெறவிருக்கும் ஆண்கள் 100 மீட்டர் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளனர். குடியரசின் Shanti Pereira, பெண்கள் 100 மீட்டர் இறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றுள்ளார். 

நீச்சலில், சிங்கப்பூரின் Joseph Schooling, இன்று காலை நடைபெற்ற 100 மீட்டர் வண்ணத்துப் பூச்சி பாணிக்கான தேர்வுச் சுற்றில் சிறப்பாகச் செய்து, இன்றைய இறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றுள்ளார். 

குடியரசின் Quah Ting Wen, 200 மீட்டர் வண்ணத்துப் பூச்சிப் பாணியின் இறுதிப் போட்டியிலும், Tao Li 100 மீட்டர் மல்லாந்து நீச்சலின் இறுதிப் போட்டியிலும் கலந்துகொள்ளவிருக்கின்றனர். நண்பகல் 12 மணி நிலவரப்படி, சிங்கப்பூர் 43 தங்கம், 33 வெள்ளி, 47 வெண்கலப் பதக்கங்களுடன் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்