Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

விளையாட்டு மையத்தில் புதிய மருத்துவ நிலையம்

சிங்கப்பூர் விளையாட்டு மையத்தில் நிறுவப்பட்டுள்ள மருத்துவ நிலையத்தை சுகாதார அமைச்சர் திரு. கான் கிம் யோங் இன்று சுற்றிப் பார்த்துள்ளார்.  தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்கும் போட்டியாளர்களுக்கு உடனடி மருத்துவப் பராமரிப்பு வழங்கும் நோக்கில் அந்த நிலையம் செயல்பட்டு வருகிறது. 

வாசிப்புநேரம் -

இம்மாதம் 2ம் தேதியிலிருந்து இந்த நிலையம் 24 மணி நேரமும் செயல்பட்டு வருகிறது. தொடக்க நிலைப் பராமரிப்பு, விளையாட்டுத்துறை மருத்துவம், பயிற்சிவழி சிகிச்சை, சிறிய அறுவை சிகிச்சைகள் முதலியவை இங்கு வழங்கப்படுகின்றன.

பொதுத்துறை, தனியார்துறை மருத்துவமனைகளைச் சேர்ந்த மருத்துவர்கள், தாதியர், சிகிச்சை நிபுணர்கள் என 80க்கும் மேற்பட்டவர்கள் இங்கு சுழற்சி முறையில் பணியாற்றுகின்றனர்.

சராசரியாக நாளொன்றுக்கு அவர்கள் பத்து நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கின்றனர்.

இருப்பினும் இங்கு ஒரு நேரத்தில் 140 நோயாளிகள் வரை சிகிச்சை பெற வசதியுண்டு.

வெளிநாட்டு மருத்துவர்கள் சிங்கப்பூர் மருத்துவ மன்றத்தில் பதிவு செய்துகொண்டிருந்தால் அவர்கள் பரிந்துரைக்கும் மருந்துகளைக்கூட போட்டியாளர்கள் இங்குள்ள மருந்தகத்தில் வாங்கிக் கொள்ளமுடியும்.

பல்லாண்டுப் பயிற்சிக்குப் பிறகு போட்டியில் கலந்து கொள்ள விளையாட்டாளர்கள் இங்கே வருகின்றனர்.

கடைசி நேர உடல் பிரச்சினைகள் காரணமாக அவர்கள் போட்டியில் பங்கேற்பதில் சிக்கல் ஏற்படக் கூடாது.

தொலைதூரத்துக்கு அலையாமல், இயன்ற விரைவில் அவர்களுக்குச் சிகிச்சையளித்துப் போட்டிக்கு ஆயத்தப்படுத்த இந்த மருத்துவ நிலையம் வசதியளிக்கிறது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்