Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

நீச்சல் போட்டிகள் இறுதிச் சுற்று

ஆண்கள் 4*100 பல பாணி நீச்சலில் சிங்கப்பூருக்குத் தங்கம்!பெண்கள் 100 மீட்டர் வண்ணத்துப் பூச்சி பாணி நீச்சலில் சிங்கப்பூரின் தாவ் லீ (Tao Li) 59.79 விநாடிகளில் போட்டியை முடித்து தங்கம் வென்றிருக்கிறார். 

வாசிப்புநேரம் -
நீச்சல் போட்டிகள் இறுதிச் சுற்று

யதேச்சை பாணி நீச்சலில் தங்கத்தை வென்றார் அமேண்டா லிம்.

ஆண்கள் 4*100 பல பாணி நீச்சலில் சிங்கப்பூருக்குத் தங்கம்!

பெண்கள் 100 மீட்டர் வண்ணத்துப் பூச்சி பாணி நீச்சலில் சிங்கப்பூரின் தாவ் லீ (Tao Li) 59.79 விநாடிகளில் போட்டியை முடித்து தங்கம் வென்றிருக்கிறார். வெள்ளியையும் சிங்கப்பூர் வென்றது. அதை வென்ற குவா திங் வென் (QUAH Ting Wen) எடுத்துக்கொண்ட நேரம் ஒரு நிமிடம் 0.30 விநாடிகள்.

ஆண்கள் 50 மீட்டர் மல்லாந்த நீச்சலில் சிங்கப்பூர் தென்கிழக்காசியச் சாதனையை முறியடித்திருக்கிறது.

25.27 விநாடிகளில் போட்டியை முடித்து தங்கம் வென்றார் குவா செங் வென் (Quah Zheng Wen).

எதிர்பாராத விதமாகத் தங்கம் வென்ற அமேண்டா லிம் (Amanda Lim) போட்டியை 25.59 விநாடிகளில் முடித்து தென்கிழக்காசிய விளையாட்டுச் சாதனையை முறியடித்தார்.

வெள்ளியை வென்ற குவா திங் வென் (Quah Ting Wen) எடுத்துக்கொண்ட நேரம் 25.60 விநாடிகள்.

வெண்கலத்தை வென்றார் பிலிப்பீன்ஸின் அல்கால்டி ஜாஸ்மின்(Alkhaldi Jasmine).
பெண்கள் 200 மீட்டர் நெஞ்சு நீச்சலில் வெண்கலம் வென்றார் சிங்கப்பூரின் சமாந்தா யோ (Samantha Yeo).
தங்கம் வென்றது வியட்நாம். வெள்ளி தாய்லந்துக்கு.
ஆண்கள் 400 மீட்டர் யதேச்சை பாணி நீச்சலிலும் சிங்கப்பூருக்கு வெண்கலம். பாங் ஷெங் ஜுன் (Pang Sheng Jun) எடுத்துக்கொண்ட நேரம் 3 நிமிடம் 57.60 விநாடிகள்.
தென்கிழக்காசிய சாதனை படைத்துத் தங்கம் வென்றது மலேசியா.வெள்ளிப் பதக்கம் பிலிப்பீன்ஸுக்குச் சென்றது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்