Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

சிங்கப்பூருக்கு மேலும் பல தங்கங்கள்

தென்கிழக்காசிய விளையாட்டுகளில் இன்று சிங்கப்பூருக்கு மேலும் சில தங்கங்கள் கிடைத்துள்ளன.

வாசிப்புநேரம் -

தென்கிழக்காசிய விளையாட்டுகளில் இன்று சிங்கப்பூருக்கு மேலும் சில தங்கங்கள் கிடைத்துள்ளன.

ஆண்களுக்கான திடல்தடப் போட்டிகளில் அதன் முதல் தங்கத்தை தட்டிச் சென்றது சிங்கப்பூர்.

அதற்கு பங்களித்தார் சோ ருய் யோங் கிலாமே(Soh Rui Yong Guillaume).

2 மணிநேரம், 34 நிமிடங்கள் 56 வினாடிகளில் நெடுந்தொலைவு  ஓட்டத்தை முடித்து அவர் முதல் இடத்தைப் பிடித்தார்.

அவருக்குக் கடும்போட்டியாக விளங்கினார் தாய்லந்தின் சர்சுங் புன்துங்(Sirsung Boonthung).  

ஒரு கட்டத்தில் 40 விநாடி வித்தியாசத்தில் முன்னணியில் இருந்தார் சர்சுங். பாதிவழியில் இடைவெளியைக் குறைத்தார் சோ. 

கடைசி 200 மீட்டர் ஓட்டத்தில்தான் வேகத்தை கூட்டி வெற்றியை தமதாக்கிக்கொண்டார் சோ.

பெண்களுக்கான வலைப்பந்து இறுதிப் போட்டியில்  மலேசியாவைச் சந்தித்தது சிங்கப்பூர்.

2001ம் ஆண்டு நடைபெற்ற இறுதிப்போட்டியில் தோல்வியைத் தழுவிய சிங்கப்பூர் இம்முறை எப்படியாவது தங்கத்தை வெல்ல வேண்டும் என்ற வேட்கையுடன் ஆடியது.

சிங்கப்பூர் குழுவின் ஷாமேய்ன் சோ(Charmaine Soh) 38 புள்ளிகளைப் பெற்றுத் தந்தார்.

ஆட்டம் முடிய 7 நிமிடங்கள் இருந்த நிலையில், சமநிலைப்படுத்தியது மலேசியா. 

விடாமுயற்சியுடன் ஆடிய சிங்கப்பூர் குழு இறுதியில் தங்கத்தை வென்றது.

தாய்லந்து புருணை ஆகிய நாடுகள் மூன்றாவது நிலையைப் பகிர்ந்துகொண்டன.

பெண்களுக்கான 10 மீட்டர் ஆகாயச் சூழல் கைத்துப்பாக்கி போட்டியில் தங்கத்தைப் பெற்றுத் தந்தார் தியோ ஷூன் சியே(Teo Shun Xie)

குறிசுடும் போட்டியில் சிங்கப்பூர் மேலும் இரு வெள்ளிப் பதக்கங்களையும்,

முன்று வெண்கலப் பதக்கங்களையும் வென்றது.

ஆண்களுக்கான மூவகைக் போட்டியில், சிங்கப்பூர் வெண்கலத்தை வென்றது.

நீச்சல், சைக்கிளோட்ட அங்கங்களின் முடிவில் மூன்றாவது நிலையைப் பிடிக்க சிங்கப்பூருக்கும், தாய்லந்துக்கும் இடையில் கடும் போட்டி.

ஆனால், நெடுந்தொலைவு ஓட்டத்தின்போது தாய்லந்தைப் பின்னுக்குத் தள்ளி வெண்கலத்தைத் தனக்கென உறுதி செய்தது சிங்கப்பூர்.

பிலிப்பீன்ஸ் தங்கத்தையும், மலேசியா வெள்ளியையும் வென்றன.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்