Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

50 வடிவங்களில் தேசிய தின அன்பளிப்புப் பைகள்

இவ்வாண்டின் தேசிய தின அன்பளிப்புப் பைகள், 50 விதங்களில் வடிவமைக்கப்பட்டுள்ளன. பலதரப்பட்ட பின்னணிகளைக் கொண்ட சிங்கப்பூரர்கள் அவற்றை உருவாக்கியுள்ளனர். குடியரசின் 50வது பிறந்தநாளைக் கொண்டாடும் வகையில் அவை அமைந்திருக்கும். 

வாசிப்புநேரம் -

சிங்கப்பூர்: இவ்வாண்டின் தேசிய தின அன்பளிப்புப் பைகள், 50 விதங்களில் வடிவமைக்கப்பட்டுள்ளன. பலதரப்பட்ட பின்னணிகளைக் கொண்ட சிங்கப்பூரர்கள் அவற்றை உருவாக்கியுள்ளனர். குடியரசின் 50வது பிறந்தநாளைக் கொண்டாடும் வகையில் அவை அமைந்திருக்கும். தேசிய தின அணிவகுப்பு 2015ன் நிர்வாகக் குழு, இன்று காலை நடந்த செய்தியாளர் கூட்டத்தில் அந்த விவரங்களை வெளியிட்டது.

(படம்: Elizabeth Goh)

அன்பளிப்புப் பையில் உள்ள பொருட்கள் சிங்கப்பூரின் தொடக்க காலத்தை நினைவுபடுத்தும். இங்குள்ள எல்லா சிங்கப்பூரர்களின் குடும்பத்துக்கும் நிரந்தரவாசிகளின் குடும்பத்துக்கும் SG அன்பளிப்புப் பை வழங்கப்படும். மொத்தம் 1.2 மில்லியன் அன்பளிப்புப் பைகளை விநியோகிக்க, நிர்வாகக் குழு, மக்கள் கழகத்துடன்  இணைந்து பணியாற்றிவருகிறது. குடும்பத்தினர், அவற்றை எப்படிப் பெற்றுக்கொள்வது என்ற விவரங்கள், அடுத்த மாதம் தெரிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்