Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

தேசிய தின அணிவகுப்பில் சாதனைகள்

இவ்வாண்டு தேசிய தின அணிவகுப்பில், இதுவரை இடம்பெறாத பல புதிய அங்கங்களையும் சாதனைகளையும் எதிர்பார்க்கலாம்

வாசிப்புநேரம் -

இவ்வாண்டு தேசிய தின அணிவகுப்பில், இதுவரை இடம்பெறாத பல புதிய அங்கங்களையும் சாதனைகளையும் எதிர்பார்க்கலாம்.வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவிருக்கும் தேசிய தின அணிவகுப்புக்கான மேடை, பாடாங்கில் உருவாக்கப்பட்ட ஆகப் பெரிய மேடையாகும்.
9,600 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட மேடை, ஒரே நேரத்தில் 4,000 பங்கேற்பாளர்கள் வரை கொண்டிருக்கக் கூடியது.
பார்வையாளர்களைச் சுற்றியிருக்கும் ஒன்றிணைக்கப்பட்ட LED திரைகள், தேசிய தின அணிவகுப்பு நிகழ்ச்சிக்காகப் பொருத்தப்பட்டுள்ள ஆகப் பெரிய LED திரைகளாகும்.
Cyclorama எனப்படும் அத்திரைகளின் மொத்த நீளம் 406 மீட்டர்.
அவற்றின் பரப்பளவு 2,618 சதுர மீட்டர்.
தேசியக் காட்சியகத்திற்கு மேலே பொருத்தப்பட்டிருக்கும் 64 நுண் தெளிவுக் காட்சிக்கருவிகள் ((HD projectors)) மேடையில் உள்ள திரைச்சீலை மீது ஒளிவண்ணங்களைப் பாய்ச்சும். 
100 மீட்டர் நீளம், 70 மீட்டர் அகலம் கொண்ட அத்தகைய திரைச்சீலை சிங்கப்பூரில் உருவாக்கப்பட்டிருப்பது இதுவே முதல்முறையாகும்.
இதற்கிடையே, அணிவகுப்பில் இடம்பெறும் வான்சாகசக் காட்சியில் 50 என்ற எண்ணை உருவாக்கவிருக்கும் F-16 ரக விமானங்களில் முதல்முறையாக ஒரு பெண் விமானி இருப்பார்.30 வயது மேஜர் லீ மெய் யி, மேலும் 19 ஆகாயப் படை விமானிகளுடன் அந்தச் சாதனையைப் புரிவார்.சிங்கப்பூரில் இதுவரை காணாத ஆகப் பெரிய அளவிலான வாணவேடிக்கைகளும் வானை நிறைக்கவிருக்கின்றன.பாடாங்கிலும், மிதக்கும் மேடையிலும் இருக்கும் 50,000 பார்வையாளர்களையும் சேர்த்து, மொத்தம் 200,000 பேர் மரினா பே வட்டாரத்தில் தேசிய தின அணிவகுப்பைக் கண்டு ரசிப்பர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.பொன்விழா ஆண்டு என்பதால், பார்வையாளர்களைப் பிரமிக்க வைக்கும் அளவில் நிகழ்ச்சி நடைபெற வேண்டும் என்பதே ஏற்பாட்டாளர்களின் எண்ணம்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்