Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

இன்று இலவச பேருந்து, ரயில் சேவைகள்

சிங்கப்பூரின் பொதுப் பேருந்துகளிலும் ரயில்களிலும் இன்று நடப்பிலுள்ள இலவசப் பயணத்தை, ஆயிரக் கணக்கானோர் பயன்படுத்திக் கொண்டுள்ளனர். சுதந்திரப் பொன்விழாவையொட்டி, பொதுப் போக்குவரத்து நிறுவனங்கள் அந்தச் சலுகையை வழங்கின. 

வாசிப்புநேரம் -

சிங்கப்பூர்: சிங்கப்பூரின் பொதுப் பேருந்துகளிலும் ரயில்களிலும் இன்று நடப்பிலுள்ள இலவசப் பயணத்தை, ஆயிரக் கணக்கானோர் பயன்படுத்திக் கொண்டுள்ளனர். சுதந்திரப் பொன்விழாவையொட்டி, பொதுப் போக்குவரத்து நிறுவனங்கள் அந்தச் சலுகையை வழங்கின. 

பெருவிரைவு ரயில் நிலையங்களின் தானியங்கிக் கட்டண வாயில் கதவுகள் இன்று திறந்தே இருந்தன. அவற்றில் தொடர்ந்து பச்சை நிறம் ஒளிர்ந்தது. 
இலவசப் பயணம் என்பதாலும் நீண்ட வார இறுதி என்பதாலும் பயணிகளிடம் உற்சாகமான மனநிலை காணப்பட்டது. பெரும்பாலான பயணிகள் வெள்ளை, சிவப்பு  ஆடைகளை அணிந்து பயணம் செய்தனர். 

அணிவகுப்பு நடைபெற்ற பாடாங் திடலுக்கு அருகிலுள்ள ரயில் நிலையங்களில் சற்றுக் கூடுதலான கூட்டம் காணப்பட்டது. சொந்த வாகனங்களைத் தவிர்த்துப் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துமாறு முன்கூட்டியே சிங்கப்பூரர்களுக்கு ஆலோசனை கூறப்பட்டிருந்தது. 
வழக்கத்தைக் காட்டிலும் இன்று ரயில்களில் 30 விழுக்காட்டுப் பயணிகள் கூடுதலாகப் பயணம் செய்திருப்பதாக மதிப்பிடப்படுகிறது. 

பேருந்துகளில் கட்டண அட்டையைத் தட்டிச் செல்லும் இயந்திரங்கள் உறை போட்டு மூடப்பட்டிருந்தன. அதில் இலவசச் சவாரி என எழுதப்பட்டிருந்தது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்