Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

ரெட் லயன்ஸ் படைப்பு ரத்து

மோசமான வானிலையால் சிங்கப்பூர் ஆயுதப் படை அவர்களின் வான்குடை சாகசத்தை  ரத்துசெய்துக்கொண்டனர். ரெட் லயன்ஸ் (Red Lions) என்றழைக்கப்படும் அந்த அணி, இன்று மரீனா பே வட்டாரத்தில் அவர்களின் படைப்பை படைக்கவிருந்தனர். 

வாசிப்புநேரம் -
ரெட் லயன்ஸ் படைப்பு ரத்து

(படம்: Xabryna Kek)

சிங்கப்பூர்: மோசமான வானிலையால் சிங்கப்பூர் ஆயுதப் படை அதன் வான்குடை சாகசத்தை  இன்று ரத்துசெய்தது.. ரெட் லயன்ஸ் (Red Lions) என்றழைக்கப்படும் அந்த அணி, இன்று மரினா பே வட்டாரத்தில் அவர்களின் படைப்பை படைக்கவிருந்தது. 

6 பேர் கொண்ட ரெட் லயன்ஸ் அணியின் சாகசம், பார்வையாளர்களுக்கு மிக பிடித்த அம்சங்களில் ஒன்றாகும். சிங்கப்பூர் பொன்விழா கொண்டாட்டங்களின்போது அவர்கள் 10 ஆயிரம் அடியிலிருந்து குதித்து பாடாங்கில் தரையிறங்கவிருந்தனர்.

நிகழ்ச்சியின் தொடக்கத்தில், மோசமான வானிலை நிலவியதால் ரெட் லயன்ஸ் குழு வான்குடை சாகசத்தைப் படைக்காது என்று அணிவகுப்பின் தொகுப்பாளர்கள் அறிவித்தனர். தேசிய தின ;அணிவகுப்பு வரலாற்றில் வான்குடை சாகசம் ரத்து செய்யப்பட்டிருப்பது இது இரண்டாவது முறை.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்