Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

புலாவ் உபினில் 100 மரக்கன்றுகள் நடப்படும்

சிங்கப்பூரின் பொன்விழாக் கொண்டாட்டங்களின் ஓர் அங்கமாக  சிக்லாப் வட்டாரத்தைச் சேர்ந்த ஆயிரம் குடியிருப்பாளர்கள் புலாவ் உபினில் நூறு மரக்கன்றுகளை நடவிருக்கின்றனர்.

வாசிப்புநேரம் -

சிங்கப்பூர்: சிங்கப்பூரின் பொன்விழாக் கொண்டாட்டங்களின் ஓர் அங்கமாக சிக்லாப் வட்டாரத்தைச் சேர்ந்த ஆயிரம் குடியிருப்பாளர்கள் புலாவ் உபினில் நூறு மரக்கன்றுகளை நடவிருக்கின்றனர்.
காடுகளை வளர்த்தல், கடலோரத்தைச் சுத்தம் செய்தல் ஆகியவற்றுக்கு உதவும் முயற்சியாக நிகழ்ச்சி நாளை நடைபெறவிருக்கிறது.

சிங்கப்பூரின் பொன்விழாக் கொண்டாட்டங்களின் ஓர் அங்கமாக சிக்லாப் வட்டாரத்தைச் சேர்ந்த ஆயிரம் குடியிருப்பாளர்கள் புலாவ் உபினில் நூறு மரக்கன்றுகளை நடவிருக்கின்றனர்.

காடுகளை வளர்த்தல், கடலோரத்தைச் சுத்தம் செய்தல் ஆகியவற்றுக்கு உதவும் முயற்சியாக நிகழ்ச்சி நாளை நடைபெறவிருக்கிறது.
நிகழ்ச்சியில் இடம்பெறும் பல்வேறு உற்சாகமான நடவடிக்கைகளின் மூலம் கம்பத்து உணர்வை அனுபவிக்கும் வாய்பைப் பெறுவர், சிக்லாப் குடியிருப்பாளர்கள்.

உபின் தீவிலுள்ள கம்பத்து வீடுகள், பூங்காக்கள் ஆகியவற்றை வலம் வருவதும் நடவடிக்கைகளில் அடங்கும்.

குடும்பங்களை அடிப்படையாகக் கொண்டு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருக்கிறது சிக்லாப் அடித்தள அமைப்பு.

5 குழந்தைநல அமைப்புகளுக்கு 50,000 வெள்ளி நிதி திரட்டுவது 5000 ஆர்க்கிட்ட வடிவமைப்பிலான டி-சட்டைகளைத் தயாரிப்பது ஆகியவை நிகழ்ச்சியின் இதர முயற்சிகளில் அடங்கும்.

கடந்தகாலத்தைக் கொண்டாடுவது மட்டுமல்லாமல், உபின் தீவைக் கட்டிக்காக்கும் முயற்சியில் குடியிருப்பாளர்களும் இறங்க வேண்டும் என்று தேசிய வளர்ச்சிக்கான துணையமைச்சரும், தென்கிழக்கு வட்டாரத்துக்கான மேயருமான டாக்டர் மலிக்கி ஒஸ்மான் கூறியுள்ளார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்