Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

1 மில்லியனுக்கு அதிகமான தேசிய தின அன்பளிப்புப் பைகள் தயார்

சிங்கப்பூர்க் குடும்பங்களுக்காக ஒரு மில்லியனுக்கும் அதிகமான தேசிய தின Funpack அன்பளிப்புப் பைகள்  தயாராகிவிட்டன. ராணுவ வீரர்களும் தொண்டூழியர்களும் அதற்கான வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டனர்.

வாசிப்புநேரம் -
1 மில்லியனுக்கு அதிகமான தேசிய தின அன்பளிப்புப் பைகள் தயார்

(படம்: Elizabeth Goh)

சிங்கப்பூர்: சிங்கப்பூர்க் குடும்பங்களுக்காக ஒரு மில்லியனுக்கும் அதிகமான தேசிய தின Funpack அன்பளிப்புப் பைகள்  தயாராகிவிட்டன.  

ராணுவ வீரர்களும் தொண்டூழியர்களும் அதற்கான வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டனர். அன்பளிப்புப் பையில் பொருட்களை அடுக்கி வைக்கும் தொண்டூழியர்களில் Down Syndrome சங்கத்தைச் சேர்ந்த 60 பேரும் அடங்குவர்.  

அன்பளிப்புப் பை சென்றுசேரும் குடும்பத்துக்கு வாழ்த்துக் குறிப்பொன்றை அவர்கள் பைக்குள் வைத்துள்ளனர். அன்பளிப்புப் பையைத் தயாரித்த தொண்டூழியர்கள், விரும்பினால் அவர்களின் தொடர்பு விவரங்களையும் பையில் சேர்க்கலாம்.  

அந்தக் குடும்பம் விரும்பினால் அந்தத் தொண்டூழியரைத் தொடர்புகொள்ளலாம். இவ்வாண்டு சுமார் 36 ஆயிரம் தேசிய தின அன்பளிப்புப் பைகளைத் தொண்டூழியர்கள் அடுக்கி வைத்துள்ளனர்.  

சாதாரண சிங்கப்பூரர்களே சக சிங்கப்பூரர்களுக்கான அன்பளிப்புப் பைகளை அடுக்கும் திட்டத்தின் ஒரு பகுதியே அந்த ஏற்பாடு.பொன்விழாக் கொண்டாட்டத்தை முன்னிட்டு இவ்வாண்டு ஒவ்வொரு சிங்கப்பூர்க் குடும்பத்துக்கும் ஓர் அன்பளிப்புப் பை வழங்கப்படுகிறது.

அந்தப் பைகளை அடுக்கித் தயார்செய்யும் பணியில் அன்றாடம் கிட்டத்தட்ட ஆயிரம் பேர் ஈடுபடுகின்றனர்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்