Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

'சிங்கப்பூரில் பேச்சுத் தமிழைக் கட்டிக்காத்தல்' கருத்தரங்கு(வீடியோ)

பேச்சுத் தமிழின் பயன்பாடு அன்றாடம் நடைபெற வேண்டும்.

வாசிப்புநேரம் -

பேச்சுத் தமிழின் பயன்பாடு அன்றாடம் நடைபெற வேண்டும்.

ஒருவருடைய வயதோ, பின்னணியோ, வாழும் சூழலோ அதற்குத் தடையாக இருக்கக்கூடாது.

பிள்ளைகள் முதல் இளையோர், வேலைசெய்வோர் வரை அனைவரும் எளிய தமிழில் உரையாட வாய்ப்புகள் உண்டு.

அவற்றை அவர்கள் பயன்படுத்த வேண்டும்.

அதற்கான வழிகளை ஆராய்ந்தது, 'சிங்கப்பூரில் பேச்சுத் தமிழைக் கட்டிக்காத்தல்' எனும் கருத்தரங்கு.

அம்மா, அப்பா, அக்கா, அண்ணா என அழைக்க பிள்ளைகளுக்குக் கற்றுக்கொடுப்பது பெற்றோரின் பொறுப்பு.

சொல்வளத்தைக் கற்றுக்கொடுப்பது, ஆசிரியர்களின் பொறுப்பு.

பள்ளிப் பருவம் முடிந்த பிறகும் தமிழில் உரையாட முயற்சிசெய்வது தமிழர்களின் பொறுப்பு.

இவற்றையே கருத்தரங்கு வலியுறுத்தியது.

உமறுப் புலவர் தமிழ்மொழி நிலையத்தில் நடைபெற்ற அந்நிகழ்ச்சிக்குச் சிங்கப்பூர்த் தமிழாசிரியர் சங்கம் ஏற்பாடு செய்தது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்