Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

'விஜயகாந்த், தயாநிதி மாறன் சந்தித்தனர்'

விஜயகாந்த்தை, திமுக தரப்பிலிருந்து தயாநிதி மாறன் சந்தித்து கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தியது உண்மை என்று தேமுதிகவிலிருந்து பிரிந்து, திமுகவில் இணைந்த யுவராஜ் தெரிவித்திருக்கிறார்.

வாசிப்புநேரம் -

சென்னை: விஜயகாந்த்தை, திமுக தரப்பிலிருந்து தயாநிதி மாறன் சந்தித்து கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தியது உண்மை என்று தேமுதிகவிலிருந்து பிரிந்து, திமுகவில் இணைந்த யுவராஜ் தெரிவித்திருக்கிறார். வட சென்னை தேமுதிக முன்னாள், மாவட்ட செயலாளரான யுவராஜ் நேற்று திமுகவில் சேர்ந்தார்.

விஜயகாந்தின் வீட்டுக்கு அடிக்கடி சென்று வரும் அளவுக்கு தேமுதிகவில் செல்வாக்குடன் இருந்தார் யுவராஜ் . விஜயகாந்த்துக்கு டாக்டர் பட்டம் கிடைப்பதில் யுவராஜ் பங்கு அதிகம் என்றும் கூறப்படுகிறது.

திமுக- தேமுதிகவுக்கு இடையிலான பேச்சுவார்த்தை உச்சகட்டத்தில் இருந்தபோது, சென்னைக்கு ஒதுக்குப்புறமாக ஒரு இடத்தில் ஊடக அதிபர் கலாநிதி மாறன், விஜயகாந்த்துடன் பேச்சு வார்த்தை நடத்தியதாக முன்பு செய்திகள் கசிந்தன. கலாநிதி மாறன் 63 தொகுதிகள் கொடுக்க முன் வந்ததாகவும், விஜயகாந்த், தமது ராசி எண்ணான 5 வர வேண்டும் என்பதற்காக 59 சீட்டுகள் பெற்றுக்கொண்டதாகவும் தகவல்கள் அப்போது வெளிவந்தன

ஆயினும் விஜயகாந்த்தை சந்தித்தது கலாநிதி இல்லை, தயாநிதி என்று யுவராஜ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். விஜய்காந்த் தனித்துப் போட்டியிடும் முடிவை அறிவிப்பதற்கு, ஒரு வாரத்திற்கு முன், முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறனை, விஜயகாந்த் சந்தித்து பேசிவிட்டு வந்தார். அதனால் அப்போது தேமுதிக தொண்டர்கள் பலர் மகிழ்ச்சி அடைந்ததாக யுவராஜ் சொன்னார். ஆனால், மக்கள் நலக் கூட்டணியில், தேமுதிக இணைந்த செய்தி கேட்டு, நிர்வாகிகள் பலரும் அழுதே விட்டதாக அவர் சொன்னார்.

பணம் வாங்கிக் கொண்டு கூட்டணி வைத்து விட்டாரா என தொண்டர்கள் சந்தேகம் எழுப்பியதாகவும் அவர் சொன்னார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்