Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

தமிழகத் தேர்தல்: அதிமுக தொடர்ந்து முன்னிலையில்

தமிழகத்தின் முதலமைச்சராகத் திருவாட்டி ஜெயலலிதா மீண்டும் பொறுப்பேற்கவிருக்கிறார்.

வாசிப்புநேரம் -
தமிழகத் தேர்தல்: அதிமுக தொடர்ந்து முன்னிலையில்

(படம்: ANI)

தமிழகத்தின் முதலமைச்சராகத் திருவாட்டி ஜெயலலிதா மீண்டும் பொறுப்பேற்கவிருக்கிறார்.

திங்கட்கிழமை நடந்த சட்டமன்றத் தேர்தலில் அவருடைய அதிமுக கூட்டணி சற்று முன்னர் இருந்த நிலவரப்படி 85 இடங்களில் வெற்றியும் 47இல் முன்னணியும் வகிக்கிறது.

மக்களால்தான் இந்த வெற்றி சாத்தியமானது என்றார் திருவாட்டி ஜெயலலிதா.

தமிழகச் சட்டமன்றத்துக்கான மொத்த இடங்கள் 234. அவற்றில் 232 தொகுதிகளுக்கு திங்கட்கிழமை தேர்தல் நடந்தது.

இன்று காலையில் வாக்கு எண்ணும் பணி தொடங்கியது. 

முதலிலிருந்தே ஆளும் அதிமுக முன்னணியில் இருந்தது. 

எதிர்த்தரப்பு திமுக, அக்கட்சிக்குக் கடும் போட்டியைக் கொடுத்தது. திமுக கூட்டணி, 63 இடங்களில் வெற்றியும் 36 இடங்களில் முன்னணியும் வகிக்கிறது. 

அதன் மூலம் தமிழகச் சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தகுதியைப் பெற்றுள்ளது திமுக. 

முன்னைய தேர்தலில் எதிர்க்கட்சியாக இருந்த நடிகர் விஜயகாந்தின் தேமுதிக இந்தத் தேர்தலில் ஓரிடத்தைக்கூடப் பெறவில்லை. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்