Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

ஆறாவது முறையாக பதவியேற்கும் ஜெயலலிதா

தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணி 134 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைத் தொடர்கிறது.  தமிழ்நாட்டின் முதலமைச்சராக ஆறாவது முறையாக  திருவாட்டி ஜெயலலிதா பதவியேற்றவிருக்கிறார்.

வாசிப்புநேரம் -

சென்னை:தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணி 134 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைத் தொடர்கிறது. தமிழ்நாட்டின் முதலமைச்சராக ஆறாவது முறையாக திருவாட்டி ஜெயலலிதா பதவியேற்றவிருக்கிறார்.

அதிமுக 134 இடங்களில் வெற்றியும், திமுக 98 இடங்களில் வெற்றியும் பெற்றன. தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுக்குக் கிடைத்துள்ள வெற்றிக்கு மக்களுக்கு நன்றி தெரிவித்துக்கொண்ட அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா அது தமிழக மக்களாலேயே சாத்தியமானதாகத் தெரிவித்தார்.

தொடர்ந்து தமிழக மக்களின் நலனுக்காகப் பாடுபடவிருப்பதாக அவர் கூறினார். 1984 ஆம் ஆண்டுக்குப் பிறகு முதன் முறையாகத் தொடர்ந்தாற்போல் இரண்டாவது முறையாக அதிமுக வெற்றிபெற்று சாதனை படைத்திருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்ற திருவாட்டி ஜெயலலிதாவுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் வாழ்த்து தெரிவித்துள்ளது. தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் அருதிப் பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கவிருக்கும் அதிமுகவுக்கும் அதன் பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கும் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.

இந்நிலையில் தமிழகச் சட்டமன்றத்தில் திமுக சிறப்பான எதிர்க்கட்சியாகச் செயல்படும் என்று அக்கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்ட தேமுதிக - மக்கள் நலக்கூட்டணி, பாஜக, பாமக, நாம் தமிழர் ஆகியவை எந்தவோர் இடத்திலும் வெற்றி காணவில்லை.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்