Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

பா.ம.கவுக்கு வலை விரிக்கிறது திமுக

விஜயகாந்த் கை விரித்துவிட்டதால், பலவீனமாக காட்சியளிக்கும் நிலையில், பாமகவுக்கு வலை விரித்துள்ளது திமுக.

வாசிப்புநேரம் -

சென்னை: விஜயகாந்த் கை விரித்துவிட்டதால், பலவீனமாக காட்சியளிக்கும் நிலையில், பாமகவுக்கு வலை விரித்துள்ளது திமுக.

சட்டசபை தேர்தலை தனித்து சந்திக்க ஆயத்தமாகி உள்ள பாமக. கட்சியின் முதல்வர் வேட்பாளராக, அன்புமணியை களமிறக்கி உள்ளது.

பாமகவை தங்கள் கூட்டணியில் இணைக்க ஆரம்பத்தில் திமுக முயன்றது. ஆனால் அது வேலைக்கு ஆகவில்லை.

இந்நிலையில் தேமுதிகவும், மக்கள் நல கூட்டணியில் இணைந்துவிட்டது. தே.மு.தி.க., வராததால் ஏற்பட்டுள்ள இழப்பை சரிகட்ட, பாமக அவசியம் என்பதை திமுக உணர்ந்துள்ளது.

தமிழகத்தின் வட மாவட்டங்களில் பலம் பெற்ற, பாமகவை, கூட்டணியில் கொண்டு வந்தால் மட்டுமே, அதிமுகவை எதிர்க்க முடியும் என்று திமுக நினைக்கிறதாம்.

அதேநேரம், துணை முதல்வர் பதவி, ஆட்சியில் பங்கு போன்ற கோரிக்கைகளை ஏற்க திமுக தயாராக இல்லையாம். இதனால் பாமக என்ன சொல்லப்போகிறது என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

ஒருவேளை பாமக திமுகவோடு கூட்டணி அமைத்தால், “நான் கனிந்துவிழும் என்று சொன்னது மாம்பழத்தைத்தான்”. என்று கருணாநிதி சவுடால் பேசினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்