Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

முதல்வர் வேட்பாளராக கேப்டன் : கூட்டணியில் அதிருப்தி

ஒரு வேகத்தில் விஜயகாந்தை முதல்வர் வேட்பாளராகவும், மக்கள் நலக் கூட்டணி, தேமுதிக அணியை விஜயகாந்த் அணி என்றும் வைகோ அறிவித்துவிட்டார். ஆனால் அதை முழுமையாக ஏற்க முடியாமல் தவிக்கிறார்கள் மக்கள் நலக் கூட்டணியின் பிற தலைவர்கள்.

வாசிப்புநேரம் -
முதல்வர் வேட்பாளராக கேப்டன் : கூட்டணியில் அதிருப்தி

கேப்டன் விஜயகாந்த்

சென்னை: ஒரு வேகத்தில் விஜயகாந்தை முதல்வர் வேட்பாளராகவும், மக்கள் நலக் கூட்டணி, தேமுதிக அணியை விஜயகாந்த் அணி என்றும் வைகோ அறிவித்துவிட்டார். ஆனால் அதை முழுமையாக ஏற்க முடியாமல் தவிக்கிறார்கள் மக்கள் நலக் கூட்டணியின் பிற தலைவர்கள்.

தமிழகத்தில் அதிமுக அல்லது திமுக இரண்டில் ஏதோ ஒரு கட்சியுடன்தான் கூட்டணி என்ற சூழல் நிலவிக் கொண்டிருந்த நேரத்தில், துணிச்சலாக மக்கள் நலக் கூட்டணி என்ற மூன்றாவது மாற்று அணியை உருவாக்கினார் வைகோ. 

அதிமுக, திமுக, பாஜக போன்றவை கூட்டணி பற்றி பேசிக் கொண்டிருந்த நேரத்தில், வைகோ உள்ளிட்ட தலைவர்கள் நான்கு கட்ட பிரச்சாரத்தை முடித்துவிட்டிருந்தனர். 

நடுநிலையாளர்கள் பலரும் இது உண்மையிலேயே மாற்று அரசியலுக்கான அணி என்று நினைக்க ஆரம்பித்த நேரத்தில், தேமுதிகவை அணிக்குள் கொண்டுவந்தார் வைகோ. இதில் அவருடைய பங்களிப்புதான் அதிகம். 

எல்லாம் சரிதான்... ஆனால் முதல்வர் வேட்பாளராக விஜயகாந்தா? இந்தக் கேள்விதான் மக்கள் நலக் கூட்டணி ஆதரவாளர்களை ஜீரணிக்க முடியாமல் தவிக்க வைத்துள்ளது. 

வலுவான கூட்டணி அமைய வேண்டும் என்ற ஒரே காரணத்துக்காக விஜயகாந்தை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக் கொண்டுள்ளனர் மநகூ தலைவர்கள்.

இந்த நிலைப்பாட்டை பொதுவிலும் இணைய வெளியிலும் கடுமையாக எதிர்த்துப் பேச ஆரம்பித்துள்ளனர் கூட்டணியின் இரண்டாம் கட்டத் தலைவர்கள்.


 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்