Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

பிரேமலதா விஜயகாந்த் மீது  போலீஸ் வழக்கு

தேமுதிகவின் மகளிரணித் தலைவரும் கட்சித்தலைவர் விஜயகாந்தின் மனைவியுமான பிரேமலதா விஜயகாந்த் மீது நெல்லைப்  போலீசார் வழக்குப் பதிவு செய்திருக்கின்றனர்.

வாசிப்புநேரம் -

தேமுதிகவின் மகளிரணித் தலைவரும் கட்சித்தலைவர் விஜயகாந்தின் மனைவியுமான பிரேமலதா விஜயகாந்த் மீது நெல்லைப்  போலீசார் வழக்குப் பதிவு செய்திருக்கின்றனர். வாக்காளர்களைப் பணம் வாங்கத் தூண்டும் வகையில் பிரேமலதா  பேசியதாக வழக்கு மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

திருநெல்வேலி நகரப்பகுதியில் தே.மு.தி.க. தேர்தல் அறிக்கை விளக்கப் பொதுக்கூட்டத்தில் பிரேமலதா உரையாற்றிக்கொண்டிருந்தார். தமிழக முதல்வர் ஜெயலலிதா எந்தத் திட்டத்தையும் செயல்படுத்தவில்லை என்று அவர் குற்றஞ்சாட்டினார். பொதுமக்களிடம் பணப்புழக்கம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். ஆனால் தேர்தல் வந்தால் மட்டும் ஓட்டுக்குப் பணம் கொடுத்து ஏமாற்றுவதாக ஜெயலலிதாவைப் பிரேமலதா குறைகூறினார்.

மின்சாரம், பால் , பேருந்து, சாலைகளுக்கான  பழுதுபார்ப்புப் பணிகள், வீட்டுச்செலவு ஆகியவற்றுக்கு, ஆண்டுக்கு ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் செலவாவதாகப் பிரேமலதா கூறினார்.  அதனால் அதிமுக, திமுக போன்ற கட்சிகளிடம் ஒரு லட்ச ரூபாய் கேட்குமாறு அவர் சொன்னார்.

பிரேமலதா அவ்வாறு கூறியதற்காகத் திருநெல்வேலி மாவட்டத் தேர்தல் அதிகாரி மரகதநாதன், போலீசாரிடம் புகார் செய்தார். தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு எதிராகப் பேசியதற்கு பிரேமலதா விஜயகாந்த் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்