Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

ஜெயா பங்களாவில் கட்டுக்கட்டாகப் பணம்

தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் சிறுதாவூர் பங்களாவிற்கு கண்டெய்னரில் கட்டுக் கட்டாக பணம் கொண்டு செல்லப்பட்டுள்ளது என்றும், உடனடியாக அந்த பங்களாவில் சோதனை நடத்த வேண்டும் கைகோ தேர்தல் ஆணையத்திடம்  புகார் அளித்துள்ளார்.

வாசிப்புநேரம் -
ஜெயா பங்களாவில் கட்டுக்கட்டாகப் பணம்

சிறுதாவூர் பங்களா

சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் சிறுதாவூர் பங்களாவிற்கு கண்டெய்னரில் கட்டுக் கட்டாக பணம் கொண்டு செல்லப்பட்டுள்ளது என்றும், உடனடியாக அந்த பங்களாவில் சோதனை நடத்த வேண்டும் என்றும் மக்கள் நலக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளரும், மதிமுக பொதுச் செயலாளருமான வைகோ தேர்தல் ஆணையத்திடம்  புகார் அளித்துள்ளார். 

கடந்த 27 ம்  தேதி இரவு முதல்வர் ஜெயலலிதா, அடிக்கடி சென்று தங்குகின்ற சிறுதாவூர் பங்களாவிற்கு மிகப் பெரிய 'கண்ட்டெய்னர்' ஒன்று எடுத்துச் செல்லப்பட்டது. 

நம்பத் தகுந்த வட்டாரங்களில் இருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில் ரூ.1000 மற்றும் ரூ. 500 அடங்கிய நோட்டுக் கட்டுகள் பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புக்கு அந்த கண்ட்டெய்னரில் கொண்டு செல்லப்பட்டுள்ளது என்று வைகோ தமது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். 

அதைவிட மேலும் அதிர்ச்சியைத் தரக்கூடிய வகையில் முற்றிலுமாக தார்பாலின் உறையைப் போட்டு மூடிய நிலையில் பத்து லாரிகள் திங்கட்கிழமை (28.3.2016 ) காலை சிறுதாவூர் பங்களாவுக்குள் சென்றுள்ளன.

உறுதி செய்யப்படாத தகவலின் அடிப்படையில் சிறுதாவூர் பங்களா வளாகத்திற்குள்ளாக மூடி மறைக்கப்பட்ட நிலவறைகள் அமைக்கப்பட்டு உள்ளதாகவும், அதில் சட்ட விரோதமாக லஞ்ச லாவண்யத்தில் பெற்ற பணம் பதுக்கப்பட்டு, மறைக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிய வருகிறது என்று கைகோ கூறியிருக்கிறார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்