Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

தென் கொரியாவில் வந்தடைந்துள்ளது ஒலிம்பிக் சுடர்

குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் தொடங்க 100 நாட்களே உள்ள நிலையில், ஒலிம்பிக் சுடர் தென் கொரியா வந்தடைந்துள்ளது.

வாசிப்புநேரம் -
தென் கொரியாவில் வந்தடைந்துள்ளது ஒலிம்பிக் சுடர்

(படம்: AP Photo/Lee Jin-man)

குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் தொடங்க 100 நாட்களே உள்ள நிலையில், ஒலிம்பிக் சுடர் தென் கொரியா வந்தடைந்துள்ளது.

கிரீஸிலிருந்து அனுப்பப்பட்ட ஒலிம்பிக் சுடர் இன்று இன்சியோன் விமான நிலையத்தை வந்தடைந்தது.

சறுக்கு விளையாட்டில் தென் கொரியாவுக்குத் தங்கம் வென்றுதந்த நம்பிக்கை நட்சத்திரம் கிம் யூ நாவும், தென் கொரிய விளையாட்டு அமைச்சரும் விமான நிலையத்தில் சுடரைப் பெற்றுக் கொண்டனார்.

அடுத்த ஆண்டு பிப்ரவரி 9 முதல் 25 ஆம் தேதி வரை குளிர்கால ஒலிம்பிக் நடக்கவுள்ளது.

இரு கொரியாக்களின் இராணுவமற்ற பகுதியிலிருந்து 80 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள பியோங்சாங்கில் போட்டிகள் நடக்கவுள்ளன.

அதனால் நுழைவுச் சீட்டு விற்பனை மந்தமாகவே உள்ளது.

ஒலிம்பிக் சுடரை ஏந்திச் செல்வதற்காக ஏற்பாட்டாளர்கள் 7,500 பேரைத் தெரிவு செய்துள்ளனர்.

தென் கொரியா முழுவதும் 2,000 கிலோமீட்டர் தூரத்துக்கு சுடர் ஏந்திச் செல்லப்படும்.

சுமார் 30 ஆண்டுகளுக்குப் பிறகு தென் கொரியாவுக்கு மீண்டும் ஒலிம்பிக் சுடரேந்தும் வாய்ப்புக் கிடைத்துள்ளது.

முன்னர் 1988 இல் கோடை கால ஒலிம்பிக் போட்டியை நடத்தியபோது தென் கொரியா சுடரை ஏந்தியது.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்