Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

"சவால்" - சிரியா!

கடந்த சில ஆண்டுகளாகப் போரால் அவதிப்பட்டு வந்துள்ள சிரியா, காற்பந்து மூலம் மக்களுக்கு ஆனந்தத்தைத் தந்துள்ளது.

வாசிப்புநேரம் -

கடந்த சில ஆண்டுகளாகப் போரால் அவதிப்பட்டு வந்துள்ள சிரியா, காற்பந்து மூலம் மக்களுக்கு ஆனந்தத்தைத் தந்துள்ளது.

ஆசியக் கண்டத் தகுதி ஆட்டங்களில் A பிரிவில் மூன்றாவதாக வந்த சிரியா, B பிரிவில் மூன்றாவதாக வந்த ஆஸ்திரேலியாவுடன் playoff சுற்றில் நாளை மாலை 5 மணிக்கு மோதவிருக்கிறது.

இரு அணிகளும் 2 முறை மோதும். முதல் ஆட்டம் சிங்கப்பூர் நேரப்படி நாளை மாலை 5 மணிக்கு மலேசியாவில் நடைபெறும். போரால் சிரியா அந்த ஆட்டத்தைச் சொந்த மண்ணில் ஆடமுடியாத நிலை.

கடந்த 3 உலகக் கிண்ணப் போட்டிகளிலும் ஆஸ்திரேலியா இடம்பெற்றுள்ளது.

(படம்:  Reuters)

இரண்டாம் ஆட்டம் ஆஸ்திரேலியாவில் நடைபெறும். இரு ஆட்டங்களில் விழும் மொத்த கோல் எண்ணிக்கையைவைத்து வெற்றியாளர் அணி நிர்ணயிக்கப்படும். அந்த அணி பிறகு மற்றொரு playoff சுற்றில் வட அமெரிக்க அணி ஒன்றை 2 முறை சந்திக்கும். அந்தச் சுற்றை வெல்லும் அணி அடுத்த ஆண்டு உலகக் கிண்ணத்திற்குச் செல்லும்.

அதனால் சிரியா இன்னமும் உலகக் கிண்ணத்திற்குச் செல்வது உறுதியல்ல. இருந்தாலும் இவ்வளவு தூரம் வந்ததே நாட்டிற்குப் பெருமை. ஒரு கை பார்த்துவிடலாம் என்ற மனப்போக்குடன் சிரியா playoff சுற்றுகளை அணுகக்கூடும்.

சிரியா அல்லது ஆஸ்திரேலியா playoff சுற்றுகளை வென்றால் அடுத்த ஆண்டு முதன்முறையாக போட்டியில் 5 ஆசிய அணிகள் இருக்கும்(காற்பந்தில் ஆஸ்திரேலியாவும் ஆசிய அணியாக வகைப்படுத்தப்பட்டுள்ளது).

தற்போது ஆசியாவிலிருந்து ஈரான், தென்கொரியா, ஜப்பான், சவுதி அரேபியா நான்கும் உலகக் கிண்ணப் போட்டிக்குத் தகுதிபெற்றுள்ளன.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்