Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

தென் கிழக்காசியப் போட்டிகள்: மொத்தம் 670,000 வெள்ளியைச் சம்பாதித்த தங்கப் பதக்க வீரர்கள்

தென்கிழக்காசியப் போட்டிகளில் சிங்கப்பூருக்குத் தங்கப் பதக்கங்களைப் பெற்றுத் தந்தவர்களுக்கு மொத்தம் 670,000 வெள்ளி வழங்கப்பட்டது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் போட்டிகள் கோலாலம்பூரில் நடைபெற்றன.

வாசிப்புநேரம் -

சிங்கப்பூர்: தென்கிழக்காசியப் போட்டிகளில் சிங்கப்பூருக்குத் தங்கப் பதக்கங்களைப் பெற்றுத் தந்தவர்களுக்கு மொத்தம் 670,000 வெள்ளி வழங்கப்பட்டது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் போட்டிகள் கோலாலம்பூரில் நடைபெற்றன.

சிங்கப்பூர்த் தேசிய ஒலிம்பிக் மன்றத்தின் பல மில்லியன் வெள்ளி விருதுத் திட்டத்தின் வழி, அந்த விளையாட்டாளர்களுக்குப் பணம் வழங்கப்பட்டது.
தென்கிழக்காசியப் போட்டி விளையாட்டாளர்களுக்கு, அதிகபட்சமாக 3 விருதுகளுக்குப் பரிசுத் தொகை வழங்கப்படுகிறது.

விளையாட்டாளர்கள் தங்களது முதல் தங்க விருதுக்கு 10,000 வெள்ளி பெறுகின்றனர். அடுத்தடுத்த விருதுகளுக்குத் தலா 5,000 வெள்ளி அவர்களுக்குக் கிட்டும்.

நீச்சல் வீரர்கள் ஜோசஃப் ஸ்கூலிங், குவா செங் வென் ஆகியோருக்கு ஆளுக்கு
31,250 வெள்ளி கிடைத்தது. போட்டிகளில் அவர்கள் ஆளுக்கு 3 தனிநபர் விருதுகளையும் 3 குழு விருதுகளையும் பெற்றனர்.  

இவ்வாண்டின் தென் கிழக்காசியப் போட்டிகளில் சிங்கப்பூர் அணியினர் மொத்தம் 57 தங்கப் பதக்கங்கள், 58 வெள்ளிப் பதக்கங்கள், 73 வெண்கலப் பதக்கங்கள் ஆகியவற்றைக் குவித்தனர்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்