Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

ஆசியக் கிண்ணக் காற்பந்துத் தேர்வுப் போட்டி - சிங்கப்பூரும் துர்க்மேனிஸ்தானும் சமநிலையில்

ஆசியக் காற்பந்துச் சம்மேளன ஆசியக் கிண்ணக் காற்பந்துப் போட்டிகளுக்குச் சிங்கப்பூர் தகுதிபெறவேண்டுமாயின் அது எஞ்சியிருக்கும் மூன்று போட்டிகளிலும் வெற்றி பெறவேண்டும். 

வாசிப்புநேரம் -
ஆசியக் கிண்ணக் காற்பந்துத் தேர்வுப் போட்டி - சிங்கப்பூரும் துர்க்மேனிஸ்தானும் சமநிலையில்

(படம்: நூர் ஃபரான்)

நேற்றிரவு ஜாலான் புசார் விளையாட்டரங்கில் பொருதிய சிங்கப்பூரும் (Turkmenistan) துர்க்மேனிஸ்தானும் ஒன்றுக்கு ஒன்று என சமநிலை கண்டுள்ளன.

போட்டி தொடங்கி ஒரு மணி நேரம் கடந்த நிலையில் ஷாக்கிர் ஹம்ஸா சிங்கப்பூரின் கோலைப் புகுத்தினார்.

ஆட்டம் முடிய 8 நிமிடம் இருக்கும் போது
துர்க்மேனிஸ்தான் சமநிலைக் கோலைப் போட்டது. 

ஆசியக் காற்பந்துச் சம்மேளன ஆசியக் கிண்ணக் காற்பந்துப் போட்டிகளுக்குச் சிங்கப்பூர் தகுதிபெறவேண்டுமாயின் அது எஞ்சியிருக்கும் மூன்று போட்டிகளிலும் வெற்றி பெறவேண்டும்.

 சிங்கப்பூர்  துர்க்மேனிஸ்தானை மீண்டும் அடுத்த மாதம் சந்திக்கவுள்ளது.  

அந்த ஆட்டம் துர்க்மேனிஸ்தானில் இடம்பெறும்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்