Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

7 ஆண்டில் முதன்முறையாக பிரேஸில் அணி அனைத்துலகக் காற்பந்துக் கழகத்தின் உலகத் தர வரிசையில் முதலிடம்

7 ஆண்டில் முதன்முறையாக பிரேசில் அணி, அனைத்துலகக் காற்பந்துக்  கழகத்தின் உலகத் தர வரிசையில் முதலிடம் பெற்றுள்ளது.

வாசிப்புநேரம் -
7 ஆண்டில் முதன்முறையாக பிரேஸில் அணி அனைத்துலகக் காற்பந்துக் கழகத்தின் உலகத் தர வரிசையில் முதலிடம்

படம்: REUTERS/Paulo Whitaker

7 ஆண்டில் முதன்முறையாக பிரேசில் அணி, அனைத்துலகக் காற்பந்துக்  கழகத்தின் உலகத் தர வரிசையில் முதலிடம் பெற்றுள்ளது.

5 முறை வெற்றியாளரான அவ்வணியின் தேசியப் பயிற்றுவிப்பாளராகத் திரு. டிட்டே  சென்ற ஆண்டு பொறுப்பேற்றார்.

அதன்பிறகு பிரேஸில் அணி புத்துயிர் பெற்றுள்ளதாகக் கருதப்படுகிறது.

திரு.டிட்டேயின் வழிகாட்டலில் விளையாடிய 9 போட்டிகளிலும் பிரேஸில் அணி வெற்றிவாகை சூடியது. அவற்றில் 8 உலகக் கிண்ணத் தகுதிச்சுற்றுப் போட்டிகள்.

வலுமிக்க அர்ஜென்டினா அணியைப் பின்னுக்குத் தள்ளி முதலிடத்தைக் கைப்பற்றியது பிரேஸில் அணி.

புதிய தரவரிசைப் பட்டியலில் மூன்றாவது நிலை ஜெர்மனிக்கு. அடுத்தடுத்த நிலைகளில் சில்லி, கொலாம்பியா என்று, பட்டியலில் தென்னமெரிக்க நாடுகளின் கை ஓங்கியுள்ளது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்