Images
  • stephens
    (படம்:  DON EMMERT / AFP)

அமெரிக்கப் பொது விருது டென்னிஸ்: முதல் முறையாகத் தகுதிபெறும் ஸ்லோன் ஸ்டீபன்ஸ்

அமெரிக்கப் பெண்கள் இருவர் அமெரிக்கப் பொது விருது ஒற்றையர் இறுதிப்போட்டிக்குத் தகுதிபெற்றுள்ளனர்.

ஸ்லோன் ஸ்டீபன்ஸ் (Sloane Stephens) தமது முதல்
பொது விருது இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார்.

அவர் தமது சக நாட்டவரான வீனஸ் வில்லியம்ஸை (Venus Williams) ஆறுக்கு ஒன்று, 0-6, 7-5 எனும் ஆட்டக்கணக்கில் வென்றார்.

37 வயது வில்லியம்ஸ் இறுதிப்போட்டுக்குத் தகுதி பெறுவார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.

24 வயது ஸ்டீபன்ஸ் அமெரிக்கப் பொது விருதைப் பெறும் வாய்ப்புப் பெற்றுள்ளதாக நம்பப்படுகிறது.

இவரைப் போலவே இறுதிப்போட்டிக்குத் தகுதிபெற்றுள்ள இன்னோர் அமெரிக்கப் பெண்மணியான மேடிசன் கீஸ் (Madison Keys) வெற்றி பெறுவார் என்று பரவலாகப் பேசப்படுகிறது.

இன்று காலை நடைபெற்ற அரை இறுதிப்போட்டியில் அவர் தம் சக நாட்டவரான கோக்கோ வேண்டவேகை (CoCo Vandeweghe) 6-1, 6-2 எனும் ஆட்டக்கணக்கில் வெற்றி கண்டார்.

நாளை நடைபெறவிருக்கும் இறுதிப்போட்டியில் மேடிசன் கீஸ், ஸ்லோன் ஸ்டீபன்ஸைச் சந்திக்கிறார். 

உங்கள் கருத்து

Top