Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

'இவ்வாண்டின் பந்தயம் உற்சாகமானதாக அமையலாம்' : ஹெமில்ட்டன்

சீனாவில் நடந்த 'ஃபார்முல ஒன்' கார்ப் பந்தயத்தில் வெற்றி வாகை சூடிய லுயிஸ் ஹெமில்ட்டன் (Lewis Hamilton),  இந்த ஆண்டின் பந்தயம் தமக்கு ஆக உற்சாகமானதாக அமையலாம் என்று கூறியுள்ளார்.

வாசிப்புநேரம் -

சீனாவில் நடந்த 'ஃபார்முல ஒன்' கார்ப் பந்தயத்தில் வெற்றி வாகை சூடிய லுயிஸ் ஹெமில்ட்டன் (Lewis Hamilton), இந்த ஆண்டின் பந்தயம் தமக்கு ஆக உற்சாகமானதாக அமையலாம் என்று கூறியுள்ளார்.

மெர்சடிஸ் (Mercedes) அணிக்காகக் களமிறங்கியுள்ள அவர், அந்த வெற்றியைத் தொடர்ந்து, ஃபராரி (Ferrari) அணியின் செபேஸ்டியன் வெட்டலுடன் (Sebastian Vettel) புள்ளிகளைச் சமன் செய்துள்ளார்.

இந்தப் பருவம் முழுவதும் இரு அணிகளுக்குமிடையே வெற்றி வாய்ப்பு ஊசலாடும் என்று அவர் முன்னுரைத்தார். சென்ற மாதம் 26ஆம் தேதி ஆஸ்திரேலியாவில் 'ஃபார்முல ஒன்' கார்ப் பந்தயத்தில், ஃபராரி குழுவின் செபேஸ்டியன் வெட்டல் வெற்றிபெற்றார்.
நேற்றைய பந்தயத்தில், Lewis Hamilton ஆறு வினாடி வித்தியாசத்தில் செபேஸ்டியன் வெட்டலைப் பின்னுக்குத் தள்ளினார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்