Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

விறுவிறுப்பான F1 இரவு நேரக் கார்ப் பந்தயம் - சில தகவல்கள்

அனைவரின் ஆவலையும் தூண்டும் விதமாகக் கண்களுக்கு விருந்தாக அமையும் அந்த விறுவிறுப்பான போட்டி மேலும் நான்கு ஆண்டுக்கு சிங்கப்பூரில் நடக்கவுள்ளது.

வாசிப்புநேரம் -
விறுவிறுப்பான F1 இரவு நேரக் கார்ப் பந்தயம் - சில தகவல்கள்

(படம் : Today)

சிங்கப்பூரில் F1 இரவு நேரக் கார்ப்பந்தயம் 10ஆவது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

அனைவரின் ஆவலையும் தூண்டும் விதமாகக் கண்களுக்கு விருந்தாக அமையும் அந்த விறுவிறுப்பான போட்டி மேலும் 4 ஆண்டுக்கு சிங்கப்பூரில் நடக்கவுள்ளது.

இந்த ஆண்டின் கார்ப்பந்தயம் இன்றிரவு தொடங்கி நாளை மறுநாள் முடிவுறும்.

F1 பற்றிய சில தகவல்கள்..

ஆண்டுதோறும் சுமார் 20 நாடுகளில் F1 கார்ப்பந்தயம் நடக்கிறது.

மரினா பே சாலைத் தடத்தில் அந்த விளையாட்டுக்காகவே சிறப்புப் பாதை வடிவமைக்கப்பட்டது.

அதில் 23 வளைவுகள் உள்ளன.

அதன் நீளம் : 5,065 மீட்டர்

ஒரே நேரத்தில் 90,000 பேர் போட்டிகளைக் கண்டு ரசிக்கலாம்.

10,000 விளக்குகள் அந்தப் பாதையை அலங்கரிக்கின்றன.

20 ஓட்டுநர்கள் கார்ப்பந்தயத்தில் கலந்துகொள்கின்றனர்.

(படம் : Today)

மொத்தம் 61 முறை பந்தயத் தடத்தை போட்டியாளர்கள் சுற்றிவரவேண்டும்.

(படம்:AFP/MANAN VATSYAYANA)

கடந்தாண்டு ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த டேனியல் ரிக்கியார்டோ
ஆகக் குறைவான நேரத்தில் (1:47.187) பந்தயத்தை முடித்துள்ளார்.

இவ்வாண்டையும் சேர்த்து பந்தயத்தைக் காண 450,000 பேர் வெளிநாடுகளில் இருந்து சிங்கப்பூருக்கு வந்துள்ளனர்.

அவர்கள் சிங்கப்பூரில் செய்த செலவு சுமார் $1.4 பில்லியன்.

ஆண்டுதோறும் தொழில்நுட்பக் கல்விக் கழகம், பலதுறைத் தொழிற்கல்லூரி போன்றவற்றைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் தொண்டூழியர்களாகப் பங்கெடுக்கின்றனர்.

மேலும் 1,000 தொண்டூழியர்கள் பந்தய அதிகாரிகளாகவும் மற்ற பொறுப்புகளிலும் செயல்படுகின்றனர்.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்