Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

தந்தையின் இறுதி ஆசையை நிறைவேற்றிய கலப்புத் தற்காப்புக் கலை மலேசிய வீரர்

மனத்தில் தந்தையின் இறுதிச் சொற்கள். வெற்றியடைந்தே ஆக வேண்டும் என உறுதியுடன் 26 வயது கலப்புத் தற்காப்புக் கலை வீரர் போட்டியிடத் தொடங்கினார்.

வாசிப்புநேரம் -
தந்தையின் இறுதி ஆசையை நிறைவேற்றிய கலப்புத் தற்காப்புக் கலை மலேசிய வீரர்

(படம்: ONE Championship)

கலப்புத் தற்காப்புக் கலை மலேசிய வீரர் ஹிஷாம் சம்சுதீன் தமது தந்தையின் இறுதி ஆசையை நிறைவேற்ற நேற்று களத்தில் இறங்கினார்.

ஒரு நாளுக்கு முன்னர்தான் அவரின் தந்தை காலமானார்.

உணர்வுகளைக் கடுப்படுத்திக் கொண்டு, போட்டிக் களத்தில் இந்தோனேசிய விளையாட்டாளர் ஜெரிமி மெக்சியாஸை எதிர்த்து நின்றார் ஹிஷாம்.

ஜக்கர்த்தாவில் நடந்தது ONE Championship’s ‘Total Victory’ எனும் போட்டியில் அவ்விருவரும் பொருதினர்.

மனத்தில் தந்தையின் இறுதிச் சொற்கள்.

வெற்றியடைந்தே ஆக வேண்டும் என உறுதியுடன் 26 வயது கலப்புத் தற்காப்புக் கலை வீரர் ஹிஷாம் போட்டியிடத் தொடங்கினார்.

(படம்:ONE Championship)

ஏனினில் முதல் சுற்றிலேயே வெற்றிவாகை சூடினார் இஷாம்.

தாம் பெற்ற வெற்றியைத் தந்தைக்கு அர்ப்பணித்து மனம் நெகிழ்ந்தார். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்